Saturday, May 4, 2024
Home » சீனாவின் குளிர்கால செயலமர்வு; தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் பங்கேற்பு

சீனாவின் குளிர்கால செயலமர்வு; தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் பங்கேற்பு

- 6 நாடுகளில் உள்ள 11 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு

by Prashahini
January 18, 2024 12:20 pm 0 comment

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள ஷென்சென் உயர் தொழில்நுட்ப நிறுவகத்தில் (SIAT) நடைபெறும் “காலநிலை மாற்றத்திற்கான நீர் மேலாண்மை” குளிர்கால செயலமர்வில் பங்கேற்கின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் துறையைச் சேர்ந்த இஷ்கி, விதுசன், ஹேம பிரபா மற்றும் கௌசல்யா ஆகியோர் உள்ளிட்ட 6 நாடுகளில் உள்ள 11 பல்கலைக்கழகங்களில் இருந்து 40 பட்டதாரி மாணவர்கள் இச் செயலமர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச் செயலமர்வு ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 ஜனவரி 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு இடம்பெறுகின்றது.

நோர்வே, போலந்து, ஜேர்மனி, இலங்கை, மங்கோலியா மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகளில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் பேட்னர் நிறுவனமாக, இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், 2011 ஆம் ஆண்டு முதல் ‘CCWATER’ என்ற மூன்றாண்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

புதிய புதுமையான டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையில் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தவும், கற்கவும், பகிர்ந்து கொள்ளவும், மாற்றத்தை ஏற்படுத்தவும், இந்த குளிர்கால செயலமர்வானது சர்வதேச அரங்கில் ஒரு வாய்ப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT