Sunday, May 12, 2024
Home » அவுஸ்திரேலிய பழங்குடி அபரோஜின மக்கள் பங்கேற்ற பொங்கல் விழா

அவுஸ்திரேலிய பழங்குடி அபரோஜின மக்கள் பங்கேற்ற பொங்கல் விழா

சிட்னியில் கோலாகல நிகழ்வு

by mahesh
January 17, 2024 7:00 am 0 comment

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா அவுஸ்திரேலிய பழங்குடி அபரோஜின மக்களுடன் இணைந்து சிறப்புற சிட்னியில் நடைபெற்றது.

நியு சவுத்வேல்ஸ் மாநில தமிழ் மக்கள் சார்பாக, அனைத்து தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு பொங்கல் திருவிழா நிகழ்வு சிறப்புற Holroyd Gardens, Merrylands, எனும் பூந்தோட்டத்தில் நடைபெற்றது.

இப்பொங்கல் நிகழ்வானது, உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர் தமிழர்கள் தமிழ்மொழியால், தமிழ் இன உணர்வால், தமிழ்ப் பண்பாட்டால் தன்னார்வமாக ஒன்றுகூடும் நிகழ்வாக மிகச்சிறப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.

கூட்டுப் பொங்கல் நிகழ்வில் கோலப் போட்டி, வீட்டு விலங்குகள் காட்சிப்படுத்தல் (Animal Farm) மற்றும் சிறுவர் பொழுதுபோக்கு நிகழ்வு (Jumping Castle), தமிழ்க் கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

அத்துடன் தமிழர் விளையாட்டுகள், பழம் பொறுக்குதல், இசை நாற்காலி, தடை ஓட்டம், உரி அடித்தல் (முட்டி உடைத்தல்), சாக்கு ஓட்டம், தேசிக்காய் ஓட்டம், கிளித்தட்டு, கயிறு இழுத்தல், கபடி போன்றவை, சிறிய அளவிலான மத்தாப்புக் காட்சி (Miniature Fireworks) போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் இளையோர்கள் மற்றும் பெரியவர்கள் பங்குகொண்ட பொங்கல் நடனங்கள் உட்பட விசேட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அத்முடன் இந்நிகழ்ச்சியில் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 2023 இல், தமிழ்மொழியில் சித்தியடைந்த உயர்தர (HSC) மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

–ஐங்கரன்

விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT