Monday, May 20, 2024
Home » இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி!

இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி!

by Gayan Abeykoon
May 10, 2024 8:45 am 0 comment

இந்திய மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உள்நாட்டு அளவில் நிலவும் இந்திய அரசியல் சமநிலையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலைச் சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது.

இந்திய தேசம் குறித்த புரிதல் மற்றும் அதன் வரலாறு குறித்து அறியாமல் அமெரிக்கா பேசி வருகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது” என்று தெரிவித்தார்.

“இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்குக் காரணம். இந்திய பொதுத்தேர்தலை சிக்கலாக்கும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்கிறது” என்று ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்தார்.

சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) இந்தியாவின் மதச் சுதந்திரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து அண்மையில் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மதநம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா உட்பட 16 நாடுகள் ஈடுபடுவதாக அந்த ஆணையம் குற்றச்சாட்டு முன்வைத்தது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலுவான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT