Thursday, May 16, 2024
Home » ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு

ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு

- தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

by Prashahini
January 13, 2024 8:00 pm 0 comment

– மனுதாரருக்கு எதிரான வழக்கும் இரத்து

சென்னையில் ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னையில் ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி இளைஞர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் கிடையாது.

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது அல்லது அதைக் காட்டி சிறார்களை அல்லது மற்றவர்களை தொந்தரவு செய்வதுதான் சட்டப்படி குற்றமாகும்.

அது போன்ற செயல்களில் ஈடுபடாத இந்த மனுதாரருக்கு எதிரான வழக்கை இரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

மேலும், 90-ஸ் கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆபாச படங்கள் தொடர்பாக பாடசாலைகளிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குறிப்பாக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதிலாக இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு சமூகம் முதலில் பக்குவம் அடைய வேண்டும்.

ஆபாசப் படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இளம் வயது பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆபாசப் படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல. ஆனால், மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம். எனவே இந்த இளைஞர் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கு இரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT