Friday, November 1, 2024
Home » அஸ்வெசும இரண்டாம் கட்டம்: 450,404 விண்ணப்பங்கள் ஏற்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டம்: 450,404 விண்ணப்பங்கள் ஏற்பு

by sachintha
May 16, 2024 6:59 am 0 comment

அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்ட த்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்காக இதுவரை, 450,404 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கிடைத்துள்ள விண்ணப்பங்களில் 84 வீதமானவை தற்போது வரை கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2000 கிராம அலுவலர்களும் அஸ்வெசும கொடுப்பனவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். விநியோகச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் இவர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அஸ்வெசும விண்ணப்பங்களை பரிசீலிப்பது, கணினி வலையமைப்பில் தரவேற்றுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில், அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x