239
வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தி உள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பாவித்து செய்யப்படும் அலங்காரப் பொருட்கள் பல நாட்களுக்கு உக்காது கிடப்பதால் சுற்றாடல் மாசடைகிறது.
எனவே, இதை விடுத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சுற்றாடல் அதிகார சபை மக்களை கோரியுள்ளது.
2017இல், அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் பிரகாரம் பொலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.