Sunday, April 28, 2024
Home » ஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம்

ஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம்

- ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு

by Prashahini
January 4, 2024 9:37 am 0 comment

ஜம்மு காஷ்மீரில் இன்று (04) 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.

நள்ளிரவு 12.38 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வரவில்லை.

கடந்த சில நாட்களாக மியன்மார், இந்தோனேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜப்பான் நாட்டில் சுமார் 62 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நள்ளிரவு இரு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. முதல் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும் இரண்டாவது நில அதிர்வு 4.8 ஆகவும் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT