DFCC வங்கி தனது பெறுமதிமிக்க கடன் மற்றும் டெபிட் அட்டைதாரர்களுக்கு பல்வேறுபட்ட கவர்ச்சியான, பிரத்தியேக சலுகைகளை வழங்கி, பண்டிகைக் காலத்தை வரவேற்கும் வகையில் மிகச் சிறந்த பண்டிகைக்கால வரப்பிரசாதங்களை மகிழ்ச்சியுடன் வழங்குகின்றது.
வாடிக்கையாளர் திருப்தி மீது தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் அடிக்கோடிட்டுக்காட்டும் வகையில், பல்வகைப்பட்ட தேவைகள் மற்றும் தெரிவுகளை நிறைவேற்றும் முகமாக 400 க்கும் மேற்பட்ட கூட்டாளர் வணிக மையங்களில் 75% வரையான ஒப்பற்ற சேமிப்புக்களை வழங்கி, அனைவரினதும் எதிர்பார்ப்புக்களையும் மிஞ்சுவதற்கு DFCC வங்கி தயாராகவுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான பெறுமதியை வழங்க வேண்டும் என்ற தனித்துவமான அர்ப்பணிப்புடன், DFCC வங்கி அட்டைதாரர்கள் தெரிவு செய்யப்பட்ட தமது அட்டைகளை உபயோகித்து மேற்கொள்கின்ற ஒவ்வொரு கொள்வனவுக்கும் 1% முதல் 3% வகையான CashBack எனப்படும் பணமீளளிப்பு சலுகையை வங்கி அவர்களுக்கு வழங்குகின்றது. மேற்குறிப்பிட்ட பணமீளளிப்பானது அட்டைதாரரின் தெரிவுக்கு அமைவாக, எந்தவொரு DFCC வங்கிக் கணக்கிற்கும் வரவு வைக்கப்பட்டுவதுடன், செலவு செய்யும் பணத்திற்கு உண்மையான பெறுமதியை அவர்களுக்கு வழங்குகின்றது. சேமிப்புக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் போது, அதற்கு வட்டியும் கிடைப்பதால், இதுவொரு இரட்டிப்பு வெகுமதியாக அமையப்பெறுகின்றது.