Sunday, April 28, 2024
Home » காத்தான்குடியில் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு

காத்தான்குடியில் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு

by sachintha
December 22, 2023 10:54 am 0 comment

யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று அதிகாலை 4.00 மணி முதல் காலை 7.00 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு, வீடு வீடாக தேடுதல் நடத்தினர்.
மோப்ப நாயின் உதவியுடன் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் தேடுதல் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT