Home » அரசின் இரண்டு உரக்கம்பனிகளை ஒரே கம்பனியாக இணைக்க முடிவு

அரசின் இரண்டு உரக்கம்பனிகளை ஒரே கம்பனியாக இணைக்க முடிவு

by sachintha
December 22, 2023 9:06 am 0 comment

வீண் விரயம் தடுப்பு, இலாபமீட்டுவதே நோக்கம்———

அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை உரக் கம்பனி (Ceylon Fertilizer Company) மற்றும் கொழும்பு கொமர்ஷியல் உரக் கம்பனி (Colombo Commercial Fertilizers) ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அரசுக்குச் சொந்தமான இந்த இரண்டு உர நிறுவனங்களும் ஒரு தலைவர் மற்றும் ஒரு பணிப்பாளர் சபையின் கீழ் ஒரு நிறுவனமாக செயற்படும்.

இதற்காகான முயற்சிகளை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர எடுத்துள்ளார்.

இதன் மூலம் ஒரே விடயத்தின் கீழ் பிரிக்கப்பட்ட நிறுவனங்களை இணைப்பதன் மூலம், பொதுமக்களின் நிதி விரயமாவதைக் தடுத்து, அந்தந்த நிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்குவதே நோக்கமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ், இதே விடயத்தின் கீழ் மேலும் பல நிறுவனங்களை இணைப்பதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான சிலோன் உர நிறுவனம் மற்றும் வர்த்தக உர நிறுவனம் என்பன State Fertilizer Corporation என, பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தற்போது இரண்டு நிறுவனங்களின் தலைவராக கடமையாற்றும் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT