புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு முற்றிலும் புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் பெந்தோட்டை EKHO Surf, அதன் தனித்துவமான, விசாலமான மற்றும் தங்குதடையற்ற சமுத்திரக் காட்சியை அனுபவிக்குமாறு பிரயாணிகள், விடுமுறை செல்பவர்கள் மற்றும் சமுத்திரத்தை நேசிப்பவர்களுக்கு அழைப்பு விடுகின்றது. 2023 டிசம்பர் 19 அன்று உத்தியோகபூர்வமாக மீளவும் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் டிசம்பரில் சுற்றுலாப் பருவத்தின் உச்சியில், மிகவும் நேர்த்தியான தருணமொன்றில், இலங்கையின் அழகிய கடற்கரை அழகின் குன்றாத மகிமையுடன், நெகிழ்திறன் மற்றும் பரிமாணத்தின் வரலாறாக தலைநிமிர்ந்து நிற்கின்றது.
தகதகவென மின்னும் சூரிய அஸ்தமனம், பஞ்சைப் போன்ற மணல், நன்கு இட வசதிகள் கொண்ட அறைகளுடன் பரந்த புல்வெளி, புத்தம்புதிய கடலுணவு வகைகள் ஆகியவற்றைக் கொண்ட EKHO Surf, உண்மையில் வெப்பமண்டலத்திலிருந்து சற்று விலகி, ஓய்வாக பொழுதைப் போக்க இடமளிக்கின்றது.
1972 ஆம் ஆண்டிலிருந்து இயங்க ஆரம்பித்து, செழிப்பான வரலாற்றைக் கொண்ட ஹோட்டலின் சிறப்பு தொடர்ந்து மேம்பட்டதுடன், EKHO Surf இன் பயணம் அன்பின் உழைப்பினால் ஆனது. வெறுமனே ஒரு ஹோட்டலைத் தோற்றுவிப்பது என்பதற்கும் அப்பால், இலங்கையின் அழகு மற்றும் அரவணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, அதில் திளைக்கச் செய்யும் அனுபவத்தை வழங்குகின்றது. இலங்கையின் தங்கக் கடற்கரையில் தமது சொந்த நினைவுகளை உருவாக்கிக் கொள்வதற்காக விருந்தினர்களை அழைத்து, காலத்தின் சோதனையையும் தாண்டி, தலைநிமிர்ந்து நிற்பதில் எமது அர்ப்பணிப்பை இந்த மீள் ஆரம்பம் குறித்து நிற்கின்றது. கடந்த பல தசாப்தங்களாக வேறுபட்ட அத்தியாயங்களை நாம் படைத்துள்ளதுடன், தற்போது கால்பதிக்கின்ற இப்புதிய அத்தியாயத்தையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்!”
புதிய அத்தியாயத்தைப் படைப்பதற்கு புதுப்பொலிவுடனான அடையாளம்
முழுமையான புனரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து தனது பல கட்ட வரலாற்றில் முற்றிலும் புதிய அத்தியாயமொன்றை 2023 டிசம்பரில் EKHO Surf ஆரம்பித்துள்ளது. நவீனத்துவத்தின் தனிச்சின்னமாக இந்த ஹோட்டல் தலைநிமிர்ந்து நிற்பதுடன், நவீன அழகியல் மற்றும் கடற்கரையோர வசீகரத்தின் உகந்த இணைப்பை அனுபவிக்குமாறு விருந்தினர்களை அழைக்கின்றது.
சமகாலத்தைப் பிரதிபலிக்கும் ஹோட்டலின் இளைப்பாறல் அறை, கடற்கரையின் உணர்வுகளைத் தூண்டும் அறைகளின் வடிவமைப்பு ஆகியன பாரம்பரிய உணர்வைத் தரும் அதேவேளையில், நவீன உணர்வுகளுக்கும் வழிகோலுகின்றன. மாற்றம் என்பது தோற்றங்களுக்கும் அப்பாற்பட்டதுடன், மேம்பட்ட வசதிகள், நலன், கோல் பேஸ் ஹோட்டலின் சகோதர ஸ்தாபனமாக, சமுத்திர முகப்புடனான Firebeach நவீன மதுபானசாலை ஆகியனவும் சேர்ந்துள்ளன.
பல கட்டங்கள் கொண்ட பாரம்பரியச் சிறப்பு
Lihiniya Surf என்ற நாமத்துடன் 1972 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஹோட்டல், போற்றத்தக்க பயணத்தைக் கடந்துள்ளதுடன், சுற்றுலாத்துறைப் போக்குகளில் அதன் ஏற்றம் மற்றும் வளர்ச்சியுடன் ஒத்திசைந்துள்ளது. Associate Hotels Group குழுமத்தின் தலைவர் திரு. குமார மலியாராச்சி அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், முதலில் அரசாங்கத்திற்கு சொந்தமாகக் காணப்பட்ட சுற்றுலாத் தொகுதியானது பெந்தோட்டை கடற்கரையில் மறக்க முடியாத ஒரு சுற்றுலா மையமாக மாறியதுடன், தென்மேற்கு கடற்கரையின் மிக நீண்ட பிரதேசமென இது புகழ்பெற்றுள்ளது.
சூரியன், கடல் மற்றும் மணல் ஆகியவற்றின் நேர்த்தியான கலவையைத் தேடுகின்றவர்களை கவரும் ஒரு இடமாக இந்த ஹோட்டல் வேகமாக பிரபலமடைந்தது. காலங்கள் கடந்த போது, அதன் தாய்நிறுவனம் Ceylon Hotels Corporation PLC உடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, Lihiniya Surf என்பது 2012 ஆம் ஆண்டில் ‘The Surf’ ஆக மாற்றம் பெற்றதுடன், இலங்கையின் துடிப்பான கலாச்சாரத்தின் உணர்வின் அடையாளத்துடன் புதுப்பிக்கப்பட்டு, 2016 இல் EKHO Surf ஆக மாறியது.
புதுப்பொலிவுடன், புத்தெழுச்சி
பெந்தோட்டை EKHO Surf இன் மீள் ஆரம்பம் டிசம்பர் 19 அன்று இடம்பெற்ற விசேட பைவத்துடன் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றதுடன், இந்த ஹோட்டல் தனது பழைய விருந்தினர்களையும், புதிதாக வரவுள்ளவர்களையும் மகிழ்வுடன் வரவேற்க தனது கதவுகளை திறந்து வைத்துள்ளது. வெப்பமண்டலத்திலிருந்து சற்று விலகி மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் ஹோட்டலின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையை மீள் ஆரம்ப கொண்டாட்டம் வழங்கியது.
கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நீளமான மணல் நிரம்பிய கடற்கரையில், விசாலமான முகப்புடன் போதிய இட வசதி கொண்ட அறைகளுடன், புத்தம்புதிய கடலுணவு வகைள் மற்றும் இதமான விருந்தோம்பல், அதிநவீன வசதிகள் ஆகியவற்றுடன் விருந்தினர்கள் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன், இலங்கையின் அழகிய கடற்கரையின் தனித்துவத்தை சிறப்பாக அனுபவிக்க முடியும்.
பெந்தோட்டை EKHO Surf ஹோட்டலில் முற்பதிவுகளை மேற்கொள்ளவும், மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும் 0772387777 / 0117765555 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளவும் அலல்து www.ekhohotels.com என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.