Monday, May 6, 2024
Home » அனைவருக்கும் சூரிய மின்சக்திக்கான வசதியை ஏற்படுத்த கைகோர்த்த அமானா வங்கி மற்றும் சிங்கர்

அனைவருக்கும் சூரிய மின்சக்திக்கான வசதியை ஏற்படுத்த கைகோர்த்த அமானா வங்கி மற்றும் சிங்கர்

by Rizwan Segu Mohideen
December 18, 2023 3:29 pm 0 comment

நிலைபேறான எதிர்காலத்துக்கான முக்கியமான படியை முன்னெடுத்து வைக்கும் வகையில், அமானா வங்கி பிஎல்சி மற்றும் சிங்கர் பிஎல்சி ஆகியன கைகோர்த்துள்ளன. அதனூடாக அனைவருக்கும் சகாயமான விலையில் சூரிய வலுவை பெற்றுக் கொடுத்து, பசுமையான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, சிங்கர் பிஎல்சியினால் நம்பிக்கை மற்றும் தர உத்தரவாதத்துடன் வழங்கப்படும் சூரிய மின் தொகுதிகளை, சகாயமான விலையில், மக்களுக்கு நட்பான நிதிவசதியினூடாக அமானா வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த வசதிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் சிங்கர் ஸ்ரீ லங்கா குழும பிரதம நிறைவேற்று அதிகாரி / முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ் விஜேவர்தன மற்றும் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் ஆகியோர், வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர், நுகர்வோர் நிதியளிப்பு தலைமை அதிகாரி ரியாஸ் நூர், சிங்கர் பிஎல்சி விற்பனை பணிப்பாளர் வஜிர தென்னகோன். தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் கபில பெரேரா, வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வருண விக்ரமசிங்க, சந்தைப்படுத்தல் முகாமையாளர் பியும் ஜயதிலக மற்றும் உதவி செயற்பாட்டு முகாமையாளர் மனோஜ் ரூபசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ஒவ்வொரு இல்லத்தின் நம்பிக்கையை வென்ற, சிங்கருடன் இந்தப் பங்காண்மையை வெளியிடுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். அதனூடாக சகாயமான விலையில் நிலைபேறான வலுத் தீர்வுகளை வாழ்வுக்கு வளமூட்டி வளர்ச்சிக்கு கைகொடுக்கும் எமது நோக்கத்துக்கமைய இயங்கக்கூடியதாக உள்ளது. இந்த செயற்பாட்டில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வலு நுகர்வு மற்றும் செலவுகளை நிர்வகித்துக்கொள்ளவும் பங்களிப்பு வழங்குகின்றோம். அத்துடன், நிலைபேறான உலகை கட்டியெழுப்பவும் பங்களிப்பை வழங்குகின்றோம்.” என்றார்.

இந்தப் பங்காண்மை தொடர்பில் சிங்கர் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன மேலும் தெரிவிக்கையில், “அமானா வங்கியுடன் கைகோர்த்து, வாடிக்கையாளர்களுக்கு தூய வலுத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதையிட்டு சிங்கர் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்களில் தரமான மற்றும் தங்கியிருக்கக்கூடிய தீர்வுகளை வழங்கியுள்ளதுடன், அமானா வங்கியுடனான இந்தப் பங்காண்மையின் அடிப்படையில் எமது சூரிய மின் பிறப்பாக்கல் தீர்வுகளை வட்டியில்லாத மக்களுக்கு நட்பான வங்கியியல் முறைமையின் கீழ் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

அமானா வங்கி பற்றி
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை பின்பற்றுகின்றமைக்காக, அமானா வங்கி தொடர்ந்தும் ஏசியன் பாங்கரினால், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி பற்றி
இலங்கையின் நுகர்வோர் பொருட்கள் துறையில் சந்தை முன்னோடியாக சிங்கர் திகழ்வதுடன், 5.7 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதுடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 30%க்கு அதிகமான ஊடுருவலையும் கொண்டுள்ளது. 145 வருடங்களுக்கு மேலான உறுதியான செயற்பாடுகளினூடாக, குழுமம், நம்பிக்கை, தரம் மற்றும் தங்கியிருக்கும் திறன் ஆகியவற்றுக்கு உறுதியான கீர்த்தி நாமத்தைக் கட்டியெழுப்பியுள்ளதுடன், இலங்கையில் அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் ஒன்றாக சிங்கர் அடிக்கடி தரப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குழுமத்தின் துணை நிறுவனமான ஹேலீஸ் பிஎல்சி, இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நன்மதிப்பை வென்ற குழுமங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கையை சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி/பணிப்பாளர் மஹேஷ் விஜேவர்தன மற்றும் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் ஆகியோர் இரு நிறுவனங்களின் அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT