Sunday, April 28, 2024
Home » பிரிவினைவாதத்தை தூண்டும் சில புலம்பெயர் அமைப்புகள்

பிரிவினைவாதத்தை தூண்டும் சில புலம்பெயர் அமைப்புகள்

சபையில் அமைச்சர் அலி சப்ரி குற்றச்சாட்டு

by gayan
December 9, 2023 7:45 am 0 comment

பிரிவினைவாதத்தை தூண்ட சில புலம்பெயர் அமைப்புகள் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “புலம்பெயர் அமைப்புகளிலும் சர்வதேச சமூகத்திலும் ஒரு சிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுவதுடன், பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது.

தமிழ்த் தரப்புப் பிரதிநிதிகள் பிரிவினைவாதம் தொடர்பாக பேசுவதாக நான் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஆயினும், நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.

பிரிவினைவாதத்தை… (03 ஆம் பக்க தொடர்ச்சி)

அதற்கிணங்க இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 2,68,920 குழந்தை பிறப்பு பதிவாகியுள்ளது. இது குறிப்பிடத்தக்க அளவு குறைவான எண்ணிக்கையாகும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு குழந்தை பிறப்பு எண்ணிக்கை 275,321 ஆகவும் 2021ஆம் ஆண்டு குழந்தை பிறப்பு 2,84,848 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் அதேவேளை 2020ஆம் ஆண்டு இந்த குழந்தை பிறப்பு 3 இலட்சத்துக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்த வருடத்தின் குழந்தை பிறப்பு வீதம் கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது 6,401 ஆக குறைவடைந்துள்ளதாகவும் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 41, 786 ஆக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT