Monday, April 29, 2024
Home » தேசிய விளையாட்டு சபைக்கு புதிய உறுப்பினர்கள்

தேசிய விளையாட்டு சபைக்கு புதிய உறுப்பினர்கள்

- அர்ஜுனவின் இடத்திற்கு வைத்தியர் மையா குணசேகர

by Prashahini
December 4, 2023 3:42 pm 0 comment

– தேசிய விளையாட்டு தெரிவுக்குழுவும் நியமனம்
– விளையாட்டு அமைச்சர் ஹரின் பெனாண்டோ நடவடிக்கை

தேசிய விளையாட்டு சபை மற்றும் தேசிய விளையாட்டு தெரிவுக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் மையா குணசேகர தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சபையின் செயலாளராக I.U. விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்னார்.

குறித்த சபையில் சிதத் வெத்தமுனி, கமல் தேசப்பிரிய உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இதற்கு முன்னர் தேசிய விளையாட்டு சபையின் தலைவராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசிய விளையாட்டு தெரிவுக்குழுவின் தலைவராக ஷவேந்திர சில்வாவும் அதன் செயலாளராக அர்ஜின் றிஸ்யா பெனாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் உறுப்பினர்களாக வைத்தியர் மையா குணசேகர உள்ளிட்ட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT