Sunday, April 28, 2024
Home » பிக் பாஷ் தொடரிலிருந்து விலகினார் ரஷித் கான்

பிக் பாஷ் தொடரிலிருந்து விலகினார் ரஷித் கான்

by Rizwan Segu Mohideen
November 26, 2023 1:41 pm 0 comment

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள பிக் பாஷ் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் ரஷித் கான், காயம் காரணமாக விலகியுள்ளார்.

ரஷித் கான் முதுகுப் பகுதியில் லேசான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இவருக்குப் பதில் மாற்று வீரர் யாரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் ரஷித் கான். இதுவரை 69 ஆட்டங்களில் பங்கேற்று 17.51 சராசரியுடன் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நடக்கவிருக்கும் பிக் பாஷ் போட்டியில் பங்கேற்கமாட்டேன் என இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான ஹாரி புரூக் அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ரஷித் கானும் விலகியுள்ளார்.

அண்மையில் முடிந்த உலகக் கிண்ணத்தில் ரஷித் கான் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக திகழ்ந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT