Saturday, May 4, 2024
Home » உலகின் பிரமாண்டமான சொகுசு கப்பல் கொழும்பில்
1691 பயணிகள், 704 பணியாளர்களுடன்

உலகின் பிரமாண்டமான சொகுசு கப்பல் கொழும்பில்

by damith
November 21, 2023 7:30 am 0 comment

எகிப்திலிருந்து வந்த “பசுபிக் வேர்ல்ட்” சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில், 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்கள் உள்ளனர். இதில், ஜப்பானிய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில்,“செலிப்ரிட்டி எட்ஜ்” (Celebrity Edge) என்ற சொகுசு பயணிகள் கப்பலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடைந்தது. இந்தியாவின் கொச்சின் துறைமுகத்திலிருந்து இக்கப்பல் வருகை தந்துள்ளது. 306 மீட்டர் நீளமுடைய நவீன வசதிகளுள்ள இந்த கப்பலில் 15 தளங்கள் உள்ளன. இதில், 2,780 பயணிகளும் 1,273 பணியாளர்களும் உள்ளனர்.

இவர்கள்,நாட்டின் பல பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.கொழும்பு, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இவர்கள் பயணிக்கவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT