Monday, April 29, 2024
Home » 100 MSME களுக்கு ரூ. 10 மில்லியன் மானியம் வழங்கும் HNB

100 MSME களுக்கு ரூ. 10 மில்லியன் மானியம் வழங்கும் HNB

- அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது

by Rizwan Segu Mohideen
November 21, 2023 3:13 pm 0 comment

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் முதன்மை திட்டமான உங்களுக்காக நாம்” திட்டத்தின் கீழ், 100 நுண் நிதி தொழில்முனைவோருக்கு 10 மில்லியன் ரூபா மானியம் ஒதுக்கியுள்ளது. இது இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டமைக்க உதவும்.

HNB Sustainability Foundation ஆல் நிறுவப்பட்ட இந்த மானியம், தேர்ந்தெடுக்கப்பட்ட நுண் நிதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு 100,000 ரூபா வரை நிதி உதவி வழங்க, அவர்களின் வர்த்தகங்களை வலுப்படுத்த, இறுதியில், SME நிலையை அடைய பாடுபட உதவும் நோக்கம் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், அசாதாரண சவால்களால் குறிக்கப்பட்ட ஒரு வருடத்தில், இந்த முயற்சி, தங்கள் செயல்பாடுகளை மீண்டும் நிறுவுவதற்கு மூலதனத்தைத் தேடும் வணிகங்களுக்கு அவசியமானது. நுண்நிதி கடன் மற்றும் SME துறைக்கு எங்கள் பல தசாப்த கால அர்ப்பணிப்புடன், அடிமட்டத்திலுள்ள தொழில்முனைவோரை உயர்த்துவதற்கு எங்கள் ஆதரவை விரிவுபடுத்துவதன், நிதி உதவி வழங்குவதன் மற்றும் நிதி அறிவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த மானியத்தை, வேலைவருகான மூலதனம், அவர்களின் வணிகத்தை மறுபடியும் முதலீடு செய்வது அல்லது தங்கள் காலில் மீண்டும் எழுந்து நிற்பது போன்றவற்றுக்கு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார். 

நன்கு நிறுவப்பட்ட Gami Pubuduwa வலையமைப்பின் மூலம் பணியாற்றி, HNB 2020 இல் தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் 300 நுண்நிதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு 30 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் முக்கியமான துறைகளுக்கு ஆதரவளிப்பதில், வங்கி மானிய நிதியில் சுமார் 70% விவசாயம் (25%), உற்பத்தி (46%) மற்றும் பிற தொழில்கள் (29%) ஆகிய தொழில்களில் தொழில்முனைவோருக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடிமட்ட தொழில்முனைவோருக்கு புத்துணர்ச்சி அளிப்பது வெறும் பணி அல்ல; அது எங்கள் கொள்கையாகும். இந்த முயற்சியின் மூலம், நிலையான தொழில்முனைவின் விதைகளை விதைப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால வளர்ச்சியை அடையவும், நெகிழ்ச்சியாக இருக்கவும் ஊக்குவித்துள்ளோம். அதே சமயம், எங்கள் முயற்சிகளின் மையத்தில் வலுவான சமூக உணர்வையும், அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகிறோம்,” என HNBஇன் பிரதி பொது முகாமையாளர் – நிலைத்தன்மை மற்றும் கார்ப்பரேட் தகவல்தொடர்பு, L. சிரந்தி கூரே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT