Monday, April 29, 2024
Home » SMR Consolidated நிறுவனம் National Industry Excellence Awards 2023 இல் தங்க விருதை வென்றது

SMR Consolidated நிறுவனம் National Industry Excellence Awards 2023 இல் தங்க விருதை வென்றது

by Rizwan Segu Mohideen
November 21, 2023 11:37 am 0 comment

சமையல் எண்ணெய் வகைகள் மற்றும் கொழுப்பு தயாரிப்புக்களின் உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகளில் இலங்கையில் முன்னணி வகித்து வருகின்ற நிறுவனமாக SMR Consolidated (Sena Mills and Refineries Pvt Ltd) திகழ்ந்து வருகின்றது. தரம் மற்றும் மேன்மை மீது காண்பித்து வருகின்ற ஓயாத அர்ப்பணிப்பிற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக, பெருமதிப்பு மிக்க National Industry Excellence Awards 2023 விருதுகள் நிகழ்வில் தேசிய மட்டத்தில் தங்க விருதை வென்றுள்ளது. நவம்பர் 01 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள நெலும் பொக்குண அரங்கில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் நடாத்தப்பட்ட தேசிய கைத்தொழில் விருதுகள் வைபவத்தில் SMR Consolidated க்கு மதிப்புமிக்க இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. SMR Consolidated இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திஷான் கருணாசேன அவர்கள் நிறுவனத்தின் சார்பில் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.   

SMR Consolidated இன் மூலோபாய வணிக மேம்பாட்டுக்கான தலைமை அதிகாரி திமாந்த நாணயக்கார அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, கருத்தினைப் பகிர்கையில், “பாரிய அளவிலான தெங்குப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி, பெருமதிப்பிற்குரிய இவ்விருதை வென்றுள்ளமை உண்மையில் மிகுந்த கௌரவமளிக்கின்றது. நாம் செயல்பட ஆரம்பித்த காலம் தொட்டே, தரம் மற்றும் மேன்மை ஆகியவற்றில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் அவற்றைப் பேணி வந்துள்ளதுடன், உலகளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் எமது தயாரிப்புக்கள் மிகவும் விரும்பப்படுவதற்கு அதுவே காரணம். இன்று எத்தனையோ சர்வதேச சந்தைகளில் தங்கத்தரத்திற்கான உத்தரவாதமாக நாம் போற்றப்படுவதுடன், இந்த நன்மதிப்பைத் தொடர்ந்தும் கட்டிக்காப்பதில் நாம் அன்றாடம் உழைத்து வருகின்றோம். 1960 களின் ஆரம்பத்தில் தேங்காய் எண்ணெய் ஆலையாக, எளிமையான ஆரம்பத்துடன், எமது பயணம் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விஸ்தரிப்பிற்கு முகங்கொடுத்துள்ளது. 1997 இல் எமது சொந்த சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாம் நிறுவி, இலங்கையில் முதலாவது தொடர்ச்சியான பௌதிக சமையல் எண்ணெய் ஆலை என்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தோம். அன்றுதொட்டு, தரத்தில் நாம் தொழிற்துறையை வழிநடத்தியுள்ளோம். எமது தயாரிப்புக்கள் மீது காண்பிக்கும் ஓயாத நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்காக உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.   

பல்வேறுபட்ட துறைகள் மத்தியில், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உள்நாட்டு தொழில்துறைகளில் மிகச் சிறந்த தொழில் முயற்சியாளர்களைத் தெரிவு செய்யும் நாடளாவியரீதியிலான ஒரு போட்டியாக தேசிய கைத்தொழில் மேன்மை விருதுகள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையால் இந்நிகழ்வு நடாத்தப்படுவதுடன், பல்வேறுபட்ட அளவுகோல்களை உள்ளடக்கிய கடுமையான மதிப்பீட்டுடன், பக்கச்சார்பற்ற நடுவர்கள் குழுவால் விண்ணப்பங்கள் கடுமையாக பரிசீலனை செய்யப்பட்டு, விருதுகளின் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.   

தரத்தின் மீது SMR Consolidated கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பு, BRC, FSSC 22000, ISO, SEDEX, SMETA, FAIRTRADE Organic மற்றும் Kosher உள்ளிட்ட மதிப்புமிக்க உணவு மற்றும் பாதுகாப்பு தர அங்கீகாரங்களை நிறுவனம் சம்பாதிக்க வழிவகுத்துள்ளது. 2023 இல் முதல்முறையாக ஆறு கண்டங்கள் மத்தியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொண்டு சாதனையை நிறுவனம் நிலைநாட்டியது. மேலும், தேசிய கைத்தொழில் விருதுகள் 2022 இல் தெங்குத் தொழில்துறை – பாரிய அளவிலான பிரிவில் இரு வெண்கல விருதுகளையும் (தேசிய மட்டம்), தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் வருடாந்த ஏற்றுமதி விருதுகள் 2022 இல் வெண்கல விருதையும் நிறுவனம் வென்றிருந்தது.      

சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு வணிகம் என்ற வகையில், உயர் தர தயாரிப்புக்களை வழங்குவதற்குப் புறம்பாக பல்வேறுபட்ட வழிகளில் இலங்கை மக்களுக்கு பெறுமதியை வழங்குவதில், மக்கள் மற்றும் நிலைபேண்தகைமை மீது SMR Consolidated கவனம் செலுத்தியுள்ளது. உள்நாட்டு நிறுவனமாக, உள்நாட்டிலேயே வளர்ச்சிகண்டு, கிட்டத்தட்ட 1,000 பேருக்கு நேரடி தொழில்வாய்ப்புடனும், 5,000 க்கும் மேற்பட்டோருக்கு மறைமுக பொருளாதார வாய்ப்புக்களைத் தோற்றுவித்தும், 6,000 க்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியும் SMR Consolidated சமூகத்திற்கு நேரடியாக பங்களித்து வருகின்றது. மேலும், சர்வதேச சந்தைகளில் தனது தயாரிப்புக்கள் மூலமாக, சர்வதேசத்தில் இலங்கையின் நன்மதிப்பை மேம்படுத்துவதில் SMR Consolidated முக்கிய பங்கு வகித்துவருகின்றது.   

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT