கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு களப்புபகுதியில் சட்ட விரோதனமான முறையில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் நேற்று (5) இடம்பெற்றுள்ளதாக கல்லடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்லடி பிரதேச விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த பிரதேசத்தில் நீண்ட நாட்களாக களப்புபகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுவான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர்கள் மற்றும் மதுபான உற்பத்திற்கு பயன்படுத்திய கோடக்கள், 390,250 மில்லி லீற்றர் (390.25 லீற்றர்) சட்டவிரோத மதுபானம் என்பன பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்து கொக்கட்டிச்சொலை பொலிஸாரின் ஊடாக நீதிமன்ற நீதிவான் முன்நிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்
மண்டூர் தினகரன் நிருபர்