Wednesday, May 22, 2024
Home » TikTok இன் வெற்றிக் கதைகள்

TikTok இன் வெற்றிக் கதைகள்

by Rizwan Segu Mohideen
November 1, 2023 11:09 am 0 comment

அனைத்து நவநாகரீக ஆர்வலர்களுக்கும், Don Kevan (@mensfashionsl) என்ற  பெயரினைக் கேட்டதும் நிச்சயமாக அது அவர்களின் மனத்திற்குள் ஆனந்தத்தினை ஏற்படுத்தும். இயற்கை அழகு சூழ்ந்த நகரமான குருநாகலை எனும் ஊரினைச்  சேர்ந்த TikTok  இல் புகழ் பூத்தவரும், இலங்கை வாழ்  ஆண்களை இலக்காகக் கொண்டு  வடிவமைக்கப்பட்ட தனது தனித்துவமான Content களின் மூலம் Fashion  உலகினையே ஓர் உலுக்கு உலுக்கி  விட்டுள்ளார். மனதினை ஈர்க்கும் அவரின் content இன் மூலம், பார்வையாளர்கள் மத்தியில் நவீனபாணி மற்றும் படைப்பாற்றல் என்பனவற்றின் தரத்தினை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவ் Fashion Content இனை உருவாக்கியவரின் வெற்றியின் பின்னணியில் உள்ள கதையினை ஆராயும் வேளையில்,​அவரின் பயணம், அவர் முகம்கொடுத்து சவால்கள் மற்றும் அவருக்கிருந்த அபிலாஷைகள் என்பனவற்றில்  நாம்  லைத்தே  போய்விடுவோம். 

  • Tik Tok இனை எப்படி ஆரம்பித்தீர்கள் என்ற உங்கள் கதையினைப் பற்றி எமக்குக் கூறமுடியுமா?

எனது பெயர் Don Kevan, அழகாக ஆடை அணிவது என்பது நம்மைப் பற்றி நாம் எப்படி உணர்கின்றோம் எனும் எண்ணப்பாங்கினை மாற்றக்கூடியது எனும் விடையத்தினை நான் எப்போதும் நம்புகின்றேன்தன்னம்பிக்கையுடன் போராடும் ஓர் நபராக, நான் நேர்த்தியாக ஆடைகளை அணியும்போது, அது எனக்கு அதிக சக்தியினை அளிப்பதனையும் மற்றும் என்னை அதிக  தன்னம்பிக்கையுடன்  உணர வைப்பதனையும்   நான் உணர்ந்திருக்கின்றேன். நான் பெற்ற இவ் உணர்வினை இச்சமுதாயமும் பெறவேண்டும் எனும் அவா என்னைத் தூண்டியது. அது மற்றவர்களும் கூட தாம் பிறப்பிலேயே பெற்றுக் கொண்ட உடலின் நிறத்தினில் அதிக நம்பிக்கையுடனும் Style ஆக உணர்வதற்கும்  உதவியது.

TikTok இல் எனது பயணமானது  ஒரு எளிய idea வோடு ஆரம்பித்தது  – அதாவது   இலங்கை வாழ் ஆண்களுக்கான Fashion குறிப்புகள் மற்றும் மலிவு விலையில் ஆடைகள் தொடர்பான யோசனைகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற விதத்தினில் ஆக இருந்தது. அவ்வாறு செய்வதன் மூலம் பலரது வாழ்வில் சாதகமான நல்ல மாற்றங்களினை உண்டாக முடியும் என்று நான் திடமாக நம்பினேன்ஆரம்பத்தில்  இது ஓர்  ஒரு சவாலாக இருந்தது, ஆனால் நான் சளைக்காமல்  தொடர்ந்தும் Content  களை  உருவாக்கி  என் பார்வையாளர்களுடன் ஈடுபாட்டில்  இருக்கும்போது, ​​என்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளர்ந்தம் படிப்படியாக  வளர்ந்து வருவதனைக்  கண்கூடாகக்  கண்டேன்.

  • TikTok இல் நீங்கள் எவ்வகையான Contaent களை உருவாக்கி வருகிறீர்கள், மற்றது உங்கள்  பார்வையாளர்கள்  அவற்றினை  ஏன் ரசிக்கிறார்கள் என நீங்கள்  நினைக்கிறீர்கள்?

TikTok இல், நான் சராசரி இலங்கை ஆண்களுக்கு ஏற்றவாறு Content களை உருவாக்கி வருகின்றேன். அதாவது ஒருவர் எவ்வாறு தனது Budjet க்கு ஏற்றபடியான Fashion Hack கள் தொடக்கம் தலை வாருதல் தொடர்பான குறிப்புகள் மற்றும் நடைமுறையில் இருக்கக்கூடிய நவநாகரீக ஆடை வகைகள் வரையும் ஆகும். Fashion ஆனது அனைவராலும் அணுகக்கூடியதாகவும், சுவாரஸ்யமானதாகவும் ஆவதனை நோக்கமாகக் கொண்டுள்ளேன். எனது பார்வையாளர்கள் எனது Content களை ரசிக்கின்றார்கள் என நான் திடமாக நம்புகின்றேன். ஏனெனில் அவர்கள் அதனைத் தம்மோடு நிச்சயம் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். மேலும் சிக்கனமாகவும் அதேவேளையில் Style ஆகவும் ஆடை அணிய வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே காணப்படுகின்றது. இதன் காரணமாக எனது குறிப்புகள் அவர்களின் வாழ்க்கையினை எவ்வாறு சாதகமான விதங்களில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதனைப் பார்க்கும்போது அது மிகவும் மனமகிழ்ச்சியினைக்   கொடுக்கின்றது.

  • உங்களின் TikTok எனும் பயணத்தினில் மற்றய Content உருவாக்குநர்கள் மற்றும் Brand களுடன் இணைந்து செயல்படுவது என்பது எவ்வளவு முக்கியம் என நினைக்கின்றீர்கள்? அவர்களின் ஒத்துழைப்புகள் தொடர்பாக  உங்கள்  அணுகுமுறை  என்ன ?

மற்றய Brand களுடன் ஒருங்கிணைந்து செல்வதானது TikTok இல் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் புதிய பார்வையாளர்களை சென்றெட்டவும், தற்போது இருக்கக்கூடிய எனது வட்டத்தினையும் தாண்டி முன்னேறவும் எனக்கு இலகுவாக உள்ளது. ஒருங்கிணைவானது, ​​மற்றைய Brand கள் எனது மதிப்புகளுடன் ஒத்துப்போவதையும் எனது பார்வையாளர்கள் மீது அவை எதிரொலிப்பதனையும் நான் உறுதி செய்கின்றேன். இங்கு நம்பகத்தன்மையானது மிகவும் முக்கியமானதாகும், மேலும் ஒவ்வொரு கூட்டிணைவும்   என்னைப் Follow செய்பவர்களின் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகின்றேன்என்னைப் போன்ற அதே பார்வையைப் பகிர்ந்து  கொள்ளும்  மற்றைய  படைப்பாளிகளுடன்  இணைந்து பயணிக்கவும்  மிகுந்த  ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

  • TikTokஇல் இருக்கக்கூடிய மற்றய Fashion Contentகளை உருவாக்குபவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்துவது எதுவென நினைக்கிறீர்கள்?

TikTok இல் இருக்கக்கூடிய மற்றய Fashion Content களை உருவாக்குபவர்களிடமிருந்து என்னை வேறுபடுத்துவது எதுவெனில்,   சராசரி இலங்கை வாழ் ஆண்களின் மீதான எனது கவனமே ஆகும். TikTok இல் பல திறமையான படைப்பாளிகள் இருக்கின்றபோதிலும், எனது நம்பகத்தன்மை மற்றும் எனது சமூகம் தனித்து நிற்க உதவும் உண்மையான விருப்பத்தின் மீது நான் நம்பிக்கை வைத்துளேன்நான் ஆடம்பரமான பாணிகளை மட்டும் காட்டவில்லை மாறாக எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை மற்றும் மலிவான Fashion ஆலோசனைகளைத்  தான்  நான்  வழங்குகின்றேன்.

  • எதிர்காலத்தில் உங்கள் Content களின் மூலம் என்ன தனிப்பட்ட இலக்குகளை  அடைய  விரும்புகிறீர்கள்  எனக்கூறுவீர்களா ?

இலங்கை வாழ் ஆண்களுக்கு நாகரீகத்தின் ஊடாக அவர்களின் தனித்துவத்தை அரவணைத்துக்கொள்ள  தொடர்ந்தும்  வலுவூட்டுவதே  எனது திட தீர்மானமாகும். எமது மனதிற்குப் பிடித்த குறிப்பிட்ட ரசனைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேகரிப்புகளை உருவாக்க, எனது வரம்பினை விரிவுபடுத்தவும், உள்ளூர் Brand களுடன் ஒத்துழைக்கவும் விரும்புகின்றேன். மேலும், Fashion ஆனது அனைவரையும் உள்ளடக்கியதாக  இருக்க வேண்டும் என நான் முழுமையாக நம்புவதனால், Body Positivity மற்றும்  சுயஏற்றுக்கொள்ளுதலை ஊக்குவிக்க  எனது  தளத்தினைப்  பயன்படுத்த  மிகவும்  விரும்புகின்றேன்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT