462
நடுவானில் விமானத்தின் எஞ்சினை அணைக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் பணியில் இல்லாத விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 83 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவர்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோவை நோக்கி பயணித்த ஹொரைசன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி அறைக்குள் புகுந்த அந்த விமானி விமான எஞ்சினை செயலிழக்கச் செய்ய முயன்ற நிலையில் விமானப் பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அப்போது விமானத்தில் பயணிகள் இருந்திருப்பதோடு விமானம் பாதுகாப்பாக போர்ட்லாண்டில் தரையிறங்கியதை அடுத்து 44 வயதான டேவிட் எமர்சன் என்ற அந்த விமானி கைது செய்யப்பட்டுள்ளார்.