Monday, May 6, 2024
Home » நாட்டின் வலுவான உறவுக்கு Belt & Road பயனளிக்கும்

நாட்டின் வலுவான உறவுக்கு Belt & Road பயனளிக்கும்

சீனாவில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

by gayan
October 19, 2023 7:40 am 0 comment

Belt and Road Initiative மாநாடு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் விரைவான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்புக்கான உறுதியான அடித்தளமாகும்.” இலங்கையுடனான வலுவான உறவு மற்றும் ஒத்துழைப்புக்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்குமென நம்புவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான Belt and Road Initiative மாநாட்டுடன் இணைந்ததாக சீனாவில் நடைபெற்ற 29 ஆவது உலக சம்மேளன அமைச்சர்கள் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேசும்போதே அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்,

(Belt and Road Initiative திட்டத்தின் கீழ், பல நாடுகளில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பல திட்டங்களுக்கு பல தனித்துவமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உட்கட்டமைப்பு தேவைப்படும் நாடுகளுக்கு, புதிய ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள் மற்றும் பிற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு நாடுகளுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதில் “ஒன் பெல்ட் ஒன் ரோடு” பாரிய பணியில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் போக்குவரத்து, நீர், மின்சாரம், துறைமுகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை நிறைவேற்றி, நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இதுவரை சீனா தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளது. உதாரணமாக, கொழும்பை விமான நிலையத்துடன் இணைக்கும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் விவசாய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கு வசதியாக உள்ளது. உட்கட்டமைப்பு மேம்பாடு தொழில்முனைவோருக்கு விரைவாகவும் எளிதாகவும் சந்தையில் நுழைவதற்கு அதிக ஊக்கத்தை உருவாக்கும் திறனாகும்.

இலங்கை, சீனாவுக்கிடையிலான வலுவான உறவை மேலும் அபிவிருத்தி செய்ய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு அப்பால் செல்ல வேண்டும் என நான் நம்புகிறேன். கல்வி, அறிவியல், தொழினுட்பம், விளையாட்டு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார உறவுகள், மனித உறவுகளை மேம்படுத்துவதை (Belt and Road Initiative கருத்தாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கத்துடன், 2015 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு புலமைப்பரிசில்கள், பயிற்சி திட்டங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு 1,200க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை சீனா வழங்கி வருகிறது.

இணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் ஒரு பொருளாதார மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இது கடல்சார் பட்டுப்பாதையின் வளர்ச்சி இலக்குடன் ஒத்துப்போகிறது.” (Belt and Road ” என்ற பொருளாதார மையமாக இலங்கை மாறும் வாய்ப்புள்ளது. தற்போது, இலங்கையின் முக்கிய துறைமுகமான கொழும்பு துறைமுகம், 145 சர்வதேச துறைமுகங்களில் 30ஆவது இடத்தில் உள்ளது. Colombo Port City இதில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இலங்கை தனது மூலோபாய நிலை மற்றும்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT