Sunday, April 28, 2024
Home » நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களை எவரும் ஆதரிக்கக் கூடாது

நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களை எவரும் ஆதரிக்கக் கூடாது

அலிஸாஹிர் மெளலானா எம்.பி

by gayan
October 19, 2023 7:10 am 0 comment

நாட்டின் தற்போதைய நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்கள் சில மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா தெரிவித்தார்.

தற்போது பெரிதாக பேசப்பட்டு வரும் நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை நாட்டு மக்கள் மீது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவை அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் காணப்படுகின்றன.

இலங்கை போன்ற ஜனநாயக நாட்டிற்கு இத்தகைய சட்டங்கள் எவ்வகையிலும் பொருத்தமற்றவை. பல்லின மக்கள் வாழும் நாட்டின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதை தடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் நலன் மற்றும் நாட்டின் நலனையும் சிந்திக்க கடமைப்பட்டுள்ள உயரிய நிறுவனமான பாராளுமன்றம் அத்தகைய சட்டங்களை ஆதரிக்க இடமளிக்கக் கூடாது.

நாட்டிற்கு பொருத்தமில்லாத இரண்டு சட்ட மூலங்கள் தொடர்பில் சிலர் நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதை நாம் வரவேற்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT