Thursday, May 2, 2024
Home » இலங்கை – அவுஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

இலங்கை – அவுஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

by damith
October 16, 2023 11:20 am 0 comment

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்று (16) அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

தனது முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையில் லக்னோவில் இந்த இரு அணிகளும் முதல் வெற்றியை எதிர்பார்த்து களமிறங்குகின்றன.

காயங்களால் பின்னடைவை சந்தித்திருக்கும் இலங்கை அணி குசல் மெண்டிஸ் தலைமையில் களமிறங்கும் நிலையில் அணியில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. தசுன் ஷானக்கவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் சாமிக்க கருணாரத்ன இன்றைய போட்டியில் களமிறங்கலாம்.

அதேபோன்று உபாதைக்கு உள்ளாகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரணவுக்கு பதில் கசுன் ராஜித்த அல்லது லஹிரு குமார களமிறங்க வாய்ப்பு உள்ளது.

முதல் இரு போட்டிகளிலும் சோபிக்கத் தவறிய அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேராவுக்கு பதில் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவை களமிறக்குவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. எனினும் அது பற்றிய முடிவு போட்டிக்கு முன்னர் எடுக்கப்படும் என்று அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது தொடக்கம் இடம்பெற்ற ஏழு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணியால் அவுஸ்திரேலியாவை வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி நடைபெறும் லக்னோ எகனா கிரிக்கெட் அரங்கு அதிகம் பந்து மேலெழுந்து வேகப்பந்து வீச்சுக்கு உதவும் அதேநேரம் சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இங்கு தென்னாபிரிக்கா அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 311 ஓட்ட வெற்றி இலக்கை துரத்தியபோது 177 ஓட்டங்களுக்கே சுருண்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT