Home » இலங்கை ஏ இலகு வெற்றி

இலங்கை ஏ இலகு வெற்றி

by Gayan Abeykoon
May 1, 2024 10:45 am 0 comment

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லுவிஸ் முறையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2–0 என முன்னிலை பெற்றது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (30) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி 27.2 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கே சுருண்டது.

மொஹமட் ஷிராஸ், சாமிக்க குணசேரக மற்றும் சஹன் ஆரச்சிகே தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

பதிலெடுத்தாடிய இலங்கை ஏ அணிக்கு சீரற்ற காலநிலை காரணமாக 30 ஓவர்களில் 101 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (03) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT