Sunday, April 28, 2024
Home » சம்மாந்துறை முஸ்லிம் ம.வி ஆசிரியர் எம்.எம்.ஏ. காதர் சேவையிலிருந்து ஓய்வு

சம்மாந்துறை முஸ்லிம் ம.வி ஆசிரியர் எம்.எம்.ஏ. காதர் சேவையிலிருந்து ஓய்வு

by gayan
October 5, 2023 5:02 pm 0 comment

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) பௌதிகவியல் பாட ஆசிரியராக எல்லோருடைய மனங்களிலும் இடம்பிடித்த ஆசிரியர் எம்.எம்.ஏ. காதர் கடந்த 26.09.2023 ஆம் திகதியுடன் தனது 30 வருட கால சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் 1963. 09. 26ஆம் திகதி மர்ஹீம்களான முகம்மட் தம்பி மற்றும் ஆசியா உம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராக சம்மாந்துறையில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்திலும், உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். கணிதப் பிரிவில் உயர்கல்வியை நிறைவு செய்து கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பௌதீக விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறினார். 1993.04.01 இல் ஆசிரியராக முதல் நியமனத்தை பெற்றவர். மாவனல்ல ஸாஹிரா தேசிய பாடசாலையில் பெற்று தனது கல்விப் பணியினைத் தொடர்ந்தார். அங்கு ஐந்து வருடங்களாக உயர்தர பௌதீகவியல் பிரபல ஆசிரியராக மிளிர்ந்தார். பின்னர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்திலும் பௌதீகவியல் ஆசிரியராக சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது சேவைக்காலத்தில் பெளதிகவியல் ஆசிரியராகவும், விஞ்ஞானப் பிரிவுத் தலைவராகவும், உயர்தர பிரிவு விஞ்ஞானம், கலை, வர்த்தகம்,தொழில்நுட்ப பாடங்களுக்கான இணைப்பாளராகவும் கடமையாற்றி இருந்தார்.

எம்.சி. அன்சார்…?

(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT