Friday, May 3, 2024
Home » கண் அழற்சியால் 56,000 பாடசாலைகளுக்குப் பூட்டு

கண் அழற்சியால் 56,000 பாடசாலைகளுக்குப் பூட்டு

by sachintha
September 29, 2023 9:18 am 0 comment

கண் அழற்சிப் பரவலைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் உள்ள 56,000க்கும் அதிகமான பாடசாலைகள் இவ்வாரம் முழுதும் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து 357,000 கண் அழற்சி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான மாணவர்கள் நேற்று (28) முதல் பாடசாலைக்கு செல்லவில்லை.

கண் அழற்சி காரணமாக கண்கள் சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது, நீர் கசிவது ஆகியவை ஏற்படுகின்றன. தொடர்பு வழியாகவும், சளி, இருமல் வழியாகவும் இந்த வைரஸ் பரவுகிறது. வைரஸுக்கு எதிராக மாணவர்களைப் பாதுகாக்கப் பாடசாலைகள் மூடப்படுவதாக பஞ்சாப் மாநிலத்தின் கல்வித்துறை கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT