Monday, April 29, 2024
Home » முதலாம் தவணைக்கு முன்பதாக இலவச பாடநூல்கள், சீருடைகள்,

முதலாம் தவணைக்கு முன்பதாக இலவச பாடநூல்கள், சீருடைகள்,

பகலுணவு மட்டுப்படுத்தப்படமாட்டாது

by damith
September 25, 2023 6:18 am 0 comment

அடுத்த வருடம் முதலாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பதாக, இலவச பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான இலவச நூல்களை பிரதேச மத்திய நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் உள்ள பிரதான பாடநூல் களஞ்சிய சாலையிலிருந்து பிரதேச மத்திய நிலையங்களுக்கு பாடநூல்கள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

மட்டுப்படுத்தப்பட்ட அளவு மாணவர்களுக்கு மாத்திரமே பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குற்றச்சாட்டுகளும் பொய்ப் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முற்றாக நிராகரிக்கிறேன். இது உண்மைக்குப் புறம்பான தகவல். அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு ஆகியவற்றை உரிய காலத்தில் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த வருட இறுதிக்குள் தவறவிடப்பட்ட அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை புத்தகங்கள் அச்சடிப்பதற்கான விடயும் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், குறைந்த செலவில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது குறித்த காலத்திற்கு முன்பதாகவே நூல்கள் அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் 4000 மில்லியன் அரசாங்கத்திற்கு மீதமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT