Sunday, April 28, 2024
Home » ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தெரிவு

ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தெரிவு

by damith
September 25, 2023 12:07 pm 0 comment

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (21) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

புதிய தலைவருக்கான தெரிவுப் போட்டியில், பல்கலைக்கழக ஆசியர்களின் அதிகமான வாக்குகளை பெற்று பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக முதற் தொகுதி மாணவர்களுள் ஒருவராகிய பேராசிரியர் எ.எம்.எம். முஸ்தபா, கடந்த காலங்களிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையிலே, இவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒலுவில் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT