Thursday, May 16, 2024
Home » பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் வீழ்ந்த காட்டு யானை மீட்பு

பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் வீழ்ந்த காட்டு யானை மீட்பு

- 20 மணிநேரம் மீட்பு பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள்

by Prashahini
September 6, 2023 1:09 pm 0 comment

திறப்பனை பொலிஸ் பகுதிக்குட்பட்ட வெள்ளமுதாவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்திருந்த காட்டு யானை ஒன்றை 20 மணி நேரத்திற்கு பின்னர் நேற்று (05) மாலை 05.00 மணியளவில் மீட்டுள்ளனர்.

திறப்பனை வெள்ளமுதாவ பகுதியில் வீட்டுத் தோட்ட விவசாய கிணறு ஒன்றில் நேற்று முன்தினம் (04) இரவு 08.00 மணியளவில் குறித்த யானை விழுந்திருந்த நிலையில் அது தொடர்பில் தோட்ட உரிமையாளர் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளார்.

தகவலறிந்து உடனடியாக செயல்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதும் விவசாய கிணறு சுமார் 30 அடி ஆழமாக இருந்ததனால் நேற்று (05) மாலை 05.00 மணியளவில் பெகோ இயந்திரத்தினை பயன்படுத்தி காட்டு யானையை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளதாக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன், திறப்பனை தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT