Monday, May 20, 2024
Home » ஜில் பைடனுக்கு கொவிட் தொற்று

ஜில் பைடனுக்கு கொவிட் தொற்று

by sachintha
September 6, 2023 1:04 pm 0 comment

அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கொவிட்–19 நோய் தொற்றியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

72 வயது திருமதி பைடனுக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர் தமது வீட்டில் உள்ளார். திருமதி பைடன் இதற்கு முன் கடந்த ஆண்டு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

80 வயதாகும் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை (4) மாலை கொவிட்–19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரின் உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை கூறியது.

இந்நிலையில், ஜோ பைடன் நாளை (07) இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி–20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜி–20 மாநாடு டெல்லியில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT