Saturday, May 11, 2024
Home » நள்ளிரவு முதல் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
September 4, 2023 6:19 pm 0 comment

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 145 இனால் அதிகரிப்பு
  • 5kg சிலிண்டர்: ரூ. 59 இனால் அதிகரிப்பு

அதன் அடிப்படையில்,

  • 12.5kg: ரூ. 3,690 இலிருந்து ரூ. 3,835 ஆக ரூ. 145 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,476 இலிருந்து ரூ. 1,535 ஆக ரூ. 59 இனால் அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கபிபட்டிருந்தது.

அதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம்  12.5kg சிலிண்டர்: ரூ. 300 இனால் குறைக்கப்பட்டதோடு, 5kg சிலிண்டர்: ரூ. 120 இனால் குறைக்கப்பட்டிருந்தன.

ஏப்ரல் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 1,290 இனால் குறைப்பு (ரூ. 3,990)
  • 5kg சிலிண்டர்: ரூ. 516 இனால் குறைப்பு (ரூ. 1,596)

நள்ளிரவு முதல் லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.145, ரூ.58, ரூ.26 இனால் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT