Wednesday, May 8, 2024
Home » துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

- அம்பலாங்கொடையில் சம்பவம்

by Prashahini
August 31, 2023 3:22 pm 0 comment

அம்பலாங்கொடையில் இன்று (31) நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலபிட்டிய, வலகெதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT