Home » 22ஆவது SLIM Brand Excellence விருதுகள் ஆரம்பம்!

22ஆவது SLIM Brand Excellence விருதுகள் ஆரம்பம்!

- “Logic behind the Magic” என்ற கருப்பொருளின் கீழ் அறிமுகம்

by Rizwan Segu Mohideen
August 24, 2023 11:28 am 0 comment

SLIM Brand Excellence கடந்த பல வருடங்களாக வெற்றிகரமான சந்தைப்படுத்தல் முயற்சிகள் மற்றும் குறிப்பிடத்தக்க வர்த்தகநாம கதைகளுக்கான அங்கீகாரத்தை வழங்கி, நாட்டின் உயர்ந்த சாதனைகளைக் கொண்டாடி வருகிறது. SLIM அண்மையில் இந்த நன்மதிப்புக்குரிய விருது விழாவின் புத்தம் புதிய தொகுப்பை, ‘Logic Behind the Magic’ என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற ஒரு பிரமாண்டமான வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தியது.வலுவான வர்த்தகநாமங்களை உருவாக்குவதில் மூலோபாயங்களுடன், புத்தாக்கத்தை இணைப்பதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் இந்த கருப்பொருள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

SLIM இன் தலைவர் சிந்தக பெரேரா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த சகாப்தத்தில், திறமையான வர்த்தகநாம முகாமைத்துவமானது பகுப்பாய்வுகள் நம்பகத்தன்மையை சந்திக்கும் தரவு நுண்ணறிவு மற்றும் விசுவாசத்திற்கான உணர்வுபூர்வமான ஒத்திசைவினை சமநிலைப்படுத்துகிறது. மாற்றங்களுக்கு மத்தியில், திறமையான முகாமைத்துவம் என்பது தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2023 இல், இது அனுபவங்கள் மற்றும் இணைப்புகளைப் பற்றியது, வெறும் விற்பனை மட்டுமல்ல. எங்கள் உள்நாட்டுச் சந்தை தரம் மற்றும் நம்பகத்தன்மையை மதிக்கின்றது. இலங்கைச் சந்தையில் செயற்படுவதென்பது கலாசாரத்தைப் புரிந்துகொள்வது, தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் பாரம்பரியத்தை மதிப்பதாகும். ஒரு நிலையான, உயர்தர நற்பெயர் முக்கியமானதாகும். SLIM Brand Excellence ஆனது உலகளாவிய ரீதியில் எமது வர்த்தகநாமங்களை மேம்படுத்துகிறது.நம்பிக்கையுடன், நாங்கள்எங்கள் வர்த்தகநாமங்களை முன்னெடுத்துச் செல்வோம். இதன் மூலம் உள்நாட்டினர் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைவதைக் காண்போம்,”என்றார்.

SLIM இன் நிகழ்வுகள் மற்றும் நிலைபேறாண்மை திட்டங்களின் துணைத் தலைவர் கயான் பெரேரா தெரிவிக்கையில், “இன்றைய நிலையற்ற சூழலில், வெற்றிகரமான வர்த்தகநாம முகாமைத்துவமானது, வர்த்தகநாமத்தின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நற்பெயரைப் பேணி, செயல்திறன் மிக்க மற்றும் சவால்களையும் சிறந்த முறையில் எதிர்கொள்கின்றது. நெருக்கடியான காலப்பகுதியில் இருந்து மீளும் வர்த்தகநாமங்கள் மீளெழுச்சி மற்றும் பொருந்திப் போகும் தன்மையை பிரதிபலித்து வலுவாக வெளிப்படும். இரண்டு தசாப்தங்களாக, SLIM Brand Excellence ஆனது, நீடித்த வணிக வெற்றிக்காக முக்கியமான புலனாகாத சொத்துக்களை -வர்த்தகநாம தொகுதிகளை போஷித்து, தரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது,” என்றார்.

SLIM Brand Excellence இன் திட்டத் தலைவர் இனோக் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,”இந்த ஆண்டு, போட்டி மிகவும் கடினமானதாகும். இருப்பினும் புதிய விருதுகள் சில உள்வாங்கப்படவுள்ளன. அந்த வகையில் ‘பசுமை விருதுகள்’ முதல் முறையாக வழங்கப்படவுள்ளன. பெருகிவரும் நிலை பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மீதான நிறுவனங்களின் ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு இவை இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பருவத்தில் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் பிரிவுகளில் ‘ஏற்றுமதி வர்த்தகநாம விருது’ மற்றும் ‘SME உள்ளூர்/ஏற்றுமதி வர்த்தகநாம விருது’ ஆகியவை உள்ளடங்கும். அனைத்து ஆர்வமுள்ள போட்டியாளர்களுக்கும், எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் அர்ப்பணிப்பு வரும் காலங்களிலும் நிலைத்திருக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

SLIM Brand Excellence விருதுகள் இலங்கை சந்தையாளர்கள் மத்தியில் ஆக்கபூர்வமான போட்டிக்கான ஒரு தளமாக அமையும். இந்த போட்டியானது, சந்தைப்படுத்துதலை ஒரு முக்கிய பொருளாதார சக்தியாக உயர்த்துவதற்கான SLIM இன் உண்மையான முயற்சியை பிரதிபலிப்பதுடன், சந்தையில் வெற்றிபெறும் மற்றும் இறுதியில் நுகர்வோரின் அபிமானத்தை வெல்லும் சக்திவாய்ந்த மூலோபாயங்களை உருவாக்கி செயல்படுத்த நிறுவனங்களுக்கு உதவுகிறது.

“SLIM வர்த்தக நாமத்தின் சிறப்பம்சம் என்பது வெறும் விருது மட்டுமல்ல, இது பூரணத்துவத்துக்கான இடைவிடாத நாட்டத்தின் கருத்துருவம் ஆகும். இது புத்தாக்கம் மற்றும் மூலோபாயத்தின் இசையாக நுகர்வோரின் இதயங்களிலும் தொழிற்துறை முழுவதும் எதிரொலிக்கிறது. இது ஒரு நீடித்த தோற்றத்தை உருவாக்கும் கலை, சிதைக்க முடியாத இணைப்புகளை உருவாக்கும் விஞ்ஞானம் மற்றும் வர்த்தகத்தின் உலகின் ஈடுசெய்ய முடியாத அடையாளமாக மாறுவதற்கான ஒரு வர்த்தகநாமத்தின் வெற்றிகரமான பயணத்தின் சக்தியாகும். இந்த விருது விழாவின் ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் அவர்களின் இடைவிடாத பங்களிப்பிற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என SLIM இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் சேனாநாயக்க குறிப்பிட்டார்.

இதில் 15 பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். மேலும், வர்த்தகநாமங்கள் பல பிரிவுகளின் கீழ் பங்குபெற முடியுமென்பதுடன், ஐந்து முதன்மை பிரிவுகள் மற்றும் 10 சிறப்பு விருது வகைகளை இது உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மதிப்பீட்டு தரநிலைகள் வர்த்தகநாமத்தின் நோக்கம், வர்த்தகநாமத்தின் உள்ளடக்கம், வர்த்தகநாமத்தின் செயல்முறை மற்றும் வர்த்தகநாமத்தின் செயல்திறன் ஆகியவற்றை சார்ந்துள்ளது. இவை இலங்கையின் புகழ்பெற்ற சந்தைப்படுத்தல் புத்திஜீவியான, மறைந்த பேராசிரியர் உதித லியனகேவின் எண்ணத்தில் உதயமான ஒரு வர்த்தகநாமத்தின் சாதனைகளின் அடிப்படைக் கற்களை உள்ளடக்குகின்றன.
புகழ்பெற்ற மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் குழு அனைத்து போட்டியாளர்களையும் மதிப்பீடு செய்யும். வர்த்தகநாமத்தின் நிலையானது ஆரம்ப எழுத்து மூலமாக சமர்ப்பிப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.

SLIM Brand Excellence Awards 2023க்கான நடுவர் குழாமின் தலைவர் ஹிமாலி மதுரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘சவால்களுக்கு மத்தியில், சில வர்த்தகநாமங்கள் சிரமங்களில் இருந்து மீண்டது மட்டுமன்றி, புத்தாக்கத்துடன் மூலோபாயத்தை இணைத்து, தடைகளை தகர்த்து வெற்றி கண்டன. துன்பங்களை வாய்ப்பாக மாற்றுவதன் மூலமும் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் அளவுகோல்களை அமைப்பதன் மூலமும் சிறந்து விளங்கும் இந்த விதிவிலக்கான வர்த்தகநாமங்களை அங்கீகரித்து கௌரவிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்,”என்றார்.

முழுவதுமாக, Brand Excellence விருதுகள் வலுவான மற்றும் ஆரோக்கியமான போட்டியாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டிய பல நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்கள் தங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகள் மற்றும் உறுதியான தீர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு இதனூடாக ஏற்படும். இந்த தளம் அவர்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் பரந்த பார்வையாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படும் ஒரு மேடையாக செயல்படுகிறது, இது சந்தைப்படுத்தல் துறையில் அவர்களின் பங்களிப்புகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கும் அங்கீகாரத்திற்கும் பங்களிப்பு செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT