Tuesday, May 21, 2024
Home » IFN விருதுகள் வழங்கும் நிகழ்வில் பல்வேறு விருதுகளை சுவீகரித்த அமானா வங்கி

IFN விருதுகள் வழங்கும் நிகழ்வில் பல்வேறு விருதுகளை சுவீகரித்த அமானா வங்கி

by Rizwan Segu Mohideen
August 7, 2023 3:28 pm 0 comment

சர்வதேச இஸ்லாமிய நிதிச் சேவைகள் துறையில் காணப்படும் சிறந்த மற்றும் முன்னணி செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் முன்னணி விருதுகள் வழங்கும் அமைப்பான IFN விருதுகள் அமைப்பினூடாக 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமானா வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. மலேசியாவை தளமாகக் கொண்ட RedMoney Group இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த IFN விருதுகள் 2022 இல், இலங்கையின் சிறந்த இஸ்லாமிய வங்கி எனும் உயர் விருதையும், இலங்கையின் சிறந்த கூட்டாண்மை வங்கி, சிறந்த டிஜிட்டல் சேவை வழங்குநர், சிறந்த விற்பனையாளர் வங்கி மற்றும் மிகவும் புத்தாக்கமான வங்கி ஆகிய விருதுகளையும் அமானா வங்கி தனதாக்கியிருந்தது.

சிறிய, நடுத்தரளவு துறை மற்றும் விற்பனைப் பிரிவுகளுக்கு ஆதரவளிக்கும் அமானா வங்கியின் சிறந்த செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டாக மாத்திரம் இந்த விருதுகள் அமைந்திராமல், இலங்கையிலுள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்புக்கும் கௌரவமாக அமைந்துள்ளது. டிஜிட்டல் வங்கிச் சேவைகள் பிரிவில் வாய்ப்புகளை இனங்காணல் மற்றும் வளர்ச்சியடைதல் ஆகியவற்றிலும், புத்தாக்கமான மக்களுக்கு நட்பான நிதித் தீர்வுகளை வழங்குவதிலும் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதிலும் வங்கி காண்பிக்கும் அதீத கவனம் செலுத்துகைகளுக்கு IFN இனால் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அமானா வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “IFN இடமிருந்து “இலங்கையின் சிறந்த இஸ்லாமிய வங்கி” எனும் விருதை நாம் மீண்டும் வென்றுள்ளதுடன், சிறந்த டிஜிட்டல் சேவை வழங்கல்கள், நுகர்வோர் வங்கியியல், கூட்டாண்மை வங்கியியல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்காகவும் நாம் கௌரவிக்கப்பட்டுள்ளமைக்காக பெருமை கொள்கின்றோம். சிறப்பை பேணுவதிலும், இலங்கையின் நிதித்துறையின் வளர்ச்சிக்கும் விருத்திக்குமான பங்களிப்புக்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த விருதுகள் மீள உறுதி செய்துள்ளது. எமது சகல ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் தொடர்ச்சியாக ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

சிறிய, நடுத்தரளவு துறை மற்றும் விற்பனைப் பிரிவுகளுக்கு ஆதரவளிக்கும் அமானா வங்கியின் சிறந்த செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டாக மாத்திரம் இந்த விருதுகள் அமைந்திராமல், இலங்கையிலுள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்புக்கும் கௌரவமாக அமைந்துள்ளது.

டிஜிட்டல் வங்கிச் சேவைகள் பிரிவில் வாய்ப்புகளை இனங்காணல் மற்றும் வளர்ச்சியடைதல் ஆகியவற்றிலும், புத்தாக்கமான மக்களுக்கு நட்பான நிதித் தீர்வுகளை வழங்குவதிலும் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதிலும் வங்கி காண்பிக்கும் அதீத கவனம் செலுத்துகைகளுக்கு IFN இனால் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT