Thursday, May 16, 2024
Home » அமானா வங்கி – ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் இணைந்து விவசாய இயந்திர சாதனங்களுக்கு நிதி வசதி

அமானா வங்கி – ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் இணைந்து விவசாய இயந்திர சாதனங்களுக்கு நிதி வசதி

by Rizwan Segu Mohideen
July 18, 2023 11:16 am 0 comment

அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி, இம்தியாஸ் இக்பால், ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்தி தர்மசேனவுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுவன அதிகாரிகளுக்கு முன்னிலையில் கையளித்தார்…

அமானா வங்கி, முன்னணி விவசாய புத்தாக்க மற்றும் நிலைபேறாண்மைச் செயற்பாட்டு நிறுவனமான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உடன் இணைந்து, இலங்கையின் விவசாயிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அவசியமான பிரத்தியேக விவசாய-இயந்திர சாதன நிதி வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் வங்கியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளதுடன், நாட்டின் விவசாய பொருளாதாரத்துக்கு அவசியமான சாதனங்களை விவசாயத்துறையில் பெற்றுக் கொள்ள உதவிகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

நாட்டின் விவசாயத் துறையின் பிரத்தியேகமான தேவைகள் தொடர்பில் ஆழமான புரிந்துணர்வுடன், அமானா வங்கியானது பிரத்தியேகமான நிதி வசதிகளை வழங்குவதற்கு தனது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விவசாய சாதனங்களை கொள்வனவு செய்வதில், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள நிதிச் சவால்களை கவனத்தில் கொண்டு, இலகு தவணை முறை மீளச் செலுத்தும் திட்டங்களினூடாக அவர்களின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்கும், மேம்படுத்திக் கொள்வதற்கும் அமானா வங்கி ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

இந்தப் பங்காண்மையினூடாக வாடிக்கையாளர்களுக்கு ஹேலீஸ் விவசாய இயந்திர சாதனங்களான நெல் இணைப்பு அறுவடை இயந்திரங்கள், ட்ராக்டர்கள், உலர்த்திகள், அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் வர்ண வகைப்படுத்தும் இயந்திரங்கள் போன்றன அடங்கலாக பல்வேறு சாதனங்களை கொள்வனவு செய்யவும், புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான Kubota, Agrotech, Shizuoka மற்றும் Kawashima ஆகியவற்றை இலகுவான கொடுப்பனவு வசதியில் நம்பிக்கையுடனான ஹேலீஸ் அக்ரிகல்ச்சரின் விற்பனைக்கு பிந்திய சேவையுடன் கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும்.

ஹேலீஸ் அக்ரிகல்ச்சருடன் தமது பங்காண்மை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “ஹேலீஸ் அக்ரிகல்ச்சருடன் கைகோர்த்து, விவசாய சாதனங்களுக்கு பிரத்தியேகமான நிதித் தேவைகளை வழங்க முன்வந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மக்களுக்கு நட்பான வங்கி மாதிரியினூடாக நெகிழ்ச்சியான நிதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம், விவசாயத் துறையைச் சேர்ந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு நவீன இயந்திர சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, தமது செயற்பாடுகளை மேம்படுத்தி, நிலைபேறான வளர்ச்சியை எய்துவதற்கு மேலும் வலுவூட்ட நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்தி தர்மசேன கருத்துத் தெரிவிக்கையில், “எமது விவசாய நிபுணத்துவத்தை அமானா வங்கியின் மக்களுக்கு நட்பான நிதித் தீர்வுகளுடன் இணைத்து, விவசாயிகளுக்கு உற்பத்தித்திறனுடனும், புத்தாக்கமாகவும் இயங்குவதற்கு அவசியமான வளங்களைப் பெற்றுக் கொடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம் என்றும் மேலும் ஒன்றிணைந்து நிலைபேறான விவசாய செயன்முறைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.” என்றார்.

அமானா வங்கி மற்றும் ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஆகியவற்றுக்கிடையிலான மூலோபாய பங்காண்மையினூடாக, புத்தாக்கம் ஊக்குவிக்கப்படுவதுடன், விவசாயத் துறையினுள் உற்பத்தித்திறன் மேம்படுத்தப்படுவதால், விவசாய நிதிவசதியளிப்பில் முக்கிய மைல்கல் எய்தப்பட்டுள்ளது. தொழிற்துறை வளர்ச்சிக்காக அமானா வங்கியின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் விவசாயத்துறையின் நிலைபேறான விருத்தி போன்றன இந்தத் திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அமானா வங்கியின் இயந்திர லீசிங் திட்டம் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகமான நிதித் தீர்வுகள் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு www.amanabank.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது வங்கியின சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர் லீசிங் அணியுடன் 0774315900 ஊடாக அல்லது 0752233844 உடன் தொடர்பு கொள்ளவும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT