Monday, May 13, 2024
Home » இலங்கையில் தாதியர் கல்வியை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கும் ICBT உடன் கைகோர்க்கும் நவலோக குழுமம்

இலங்கையில் தாதியர் கல்வியை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கும் ICBT உடன் கைகோர்க்கும் நவலோக குழுமம்

by Rizwan Segu Mohideen
July 12, 2023 11:48 am 0 comment

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக மருத்துவமனை குழுமம், மேம்பட்ட கல்வி வாய்ப்புகளுடன் தாதியர் நிபுணர்களை மேம்படுத்துவதற்காக ICBT உடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த மே 11ஆம் திகதி அன்று ICBT மேற்படிப்பு கல்வியகத்தின் தலைவர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டனர்.

இந்த கூட்டாண்மை மூலம், நவ்லோக்க மருத்துவமனை செவிலியர்கள் ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற சந்தர்லேண்ட் பல்கலைக்கழகம் வழங்கும் B’Sc (Hon.) பட்டப்படிப்பை ஆரம்பிக்க வாய்ப்பளிக்கப்படுவார்கள். நவலோக்க ஹொஸ்பிடல் ஸ்கூல் ஆஃப் நர்சிங்கில் மூன்றாண்டு ஜெனரல் நர்சிங் டிப்ளோமாவை வெற்றிகரமாக முடித்த தாதியர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும், மேலும் பாடக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடியும் அவர்களுக்கு வழங்கப்படும்.

மேலும், நவலோக்க மருத்துவமனை மற்றும் ICBT மேற்படிப்பு கல்வியகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் உயிரியல் மருத்துவப் பொறியியலில் மேம்பட்ட டிப்ளோமா திட்டமும் அடங்கும். ICBT மேற்படிப்பு கல்வியகத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்தவுடன், கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் மூன்று மாத உயிரியல் மருத்துவ தொழில்நுட்ப நிபுணத்துவ பயிற்சி பெற மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைக்கும். இந்த பயிற்சியானது, உயிரியல் மருத்துவ உபகரணங்களை நிறுவுதல் மற்றும் பழுதுபார்த்தல் மற்றும் அளவீடு செய்தல் ஆகியவற்றில் மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்கும். மேலும் அவர்களின் திறன்களை மேலும் மேம்படுத்தி, உயிரியல் மருத்துவ பொறியியல் துறையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற அவர்களை வழிநடத்தும்.

இந்த புதிய புரிந்துணர்வு ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், “எங்கள் தாதியர்கள் எங்கள் சுகாதார அமைப்பின் முதுகெலும்பு மற்றும் அவர்களின் தொழில்முறை மேம்பாட்டில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம். அதை நோக்கிய ஒரு படியாக, மேற்படிப்பு கல்வியகம் மற்றும் சந்தர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் ICBT உடன் கைகோர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் தாதியர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் அனைத்து நோயாளிகளுக்கும் விதிவிலக்கான நோயாளி பராமரிப்பு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.” என தெரிவித்தார்.

இதேபோல், ICBT மேற்கடிப்பு கல்வியகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கயைில், இந்த முயற்சியில் நவலோக்க மருத்துவமனையுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். கல்வியில் எங்களின் நிபுணத்துவத்தையும், சுகாதாரப் பாதுகாப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் இணைத்து, திறமையான தாதிதிப் பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதற்கு எங்களால் முடிந்ததைச் செய்வோம்என தெரிவித்தார்.

நவலோக மருத்துவமனை குழுமத்தினால் 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாதியர் பாடசாலையானது இலங்கையில் தனியார் துறை தாதியர் கல்வியில் முன்னோடியாக இருந்து வருகின்றது. பல ஆண்டுகளாக, 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தாதியர் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளனர் மற்றும் இப்போது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பணிபுரியும் தகுதி வாய்ந்த தாதியர்களாக மாறியுள்ளனர். இன்று, நவலோக்க தாதியர் பாடசாலையானது, நாட்டில் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாண்டு தாதியர் பாடநெறியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு இலங்கையில் இருந்து தாதியர் சான்றிதழ் மற்றும் பட்டம் வழங்கப்படுகிறது. அவர்கள் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யவும், பதிவு செய்யப்பட்ட தாதியராக பயிற்சி செய்து உரிமம் பெறவும் தகுதியுடையவர்களாக கருதப்படுவர். டிப்ளமோ படித்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை. மேலும், டிப்ளோமா பெற்றவர்களுக்கு அரசு சுகாதார நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது, அவர்களுடைய தொழில் ரீதியான எதிர்ப்பார்க்குக்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT