Home » கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை விற்பனை

கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை விற்பனை

by Kalky Jeganathan
July 7, 2023 2:22 pm 0 comment

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் உள்ளூர் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளை முட்டை 44 ரூபாவுக்கும் சிவப்பு முட்டை 48 ரூபாவுக்கும் என கட்டுப்பாட்டு விலையை விதிக்க வர்த்தக அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.

இருந்த போதிலும் நேற்றைய தினம் (06) வரை சில கடைகளில் முட்டை 60 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்ததையடுத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டமையால் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமையால் அவற்றை பேக்கரிகளுக்கு மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் மீண்டும் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்ளூர் சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுத்தால், அதிக விலைக்கு விற்பனை செய்வதை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT