Sunday, June 16, 2024
Home » முன்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் திட்டம்

முன்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் திட்டம்

by sachintha
May 23, 2024 12:51 pm 0 comment

பயிற்சி பெறாத முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலுள்ள பயிற்சியளிக்கப்படாத முன்பள்ளி ஆசிரியர்களின் திறன் மற்றும் திறன்களின் அடிப்படையில் 150 தமிழ், முஸ்லிம், சிங்கள ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன் தினம் (21) ஊவா முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தில் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ் தலைமையில் நடைபெற்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கு அமைய ஊவா மாகாண கல்வி அமைச்சின் மேற்பார்வையிலும், மாகாண ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டலின் கீழும் இந்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி மன்றத்தின் பிராந்திய பணிப்பாளர், பாடநெறி ஒருங்கிணைப்பாளர்கள், வளவாளர்கள், ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

அதேவேளை முன்பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட நடன நிகழ்ச்சியும் அன்றைய தினம் இடம்பெற்றது.

எம்.ஏ.எம்.ஹசனார்…

(ஊவா சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT