பண்டிகைக் காலம்; டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 மின் வெட்டு கிடையாது

பண்டிகைக் காலம் கருதி எதிர்வரும் டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01ஆம் திகதி ஆகிய நாட்களில் மின் வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (21) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 2023 முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படும் கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜனவரி மாதத்திலும் தற்போது அமுல்படுத்துவது போன்று 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு திட்டமிட்ட மின் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி பிரச்சினை/ டொலர் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின்சார உற்பத்திக்கான எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுவதால், தற்போது நாட்டில் திட்டமிட்ட வகையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 6 மணித்தியாலங்களுக்கு அதிகமாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...