இலங்கையில் Delta கொவிட் திரிபின் மற்றுமொரு உப பிறழ்வு அடையாளம்

இலங்கையில் Delta கொவிட் திரிபின் மற்றுமொரு உப பிறழ்வு கண்டுபிடிப்பு-New Sub Variant of the Delta COVID Varient-Lineage-B.1.617.2.28-AY.104

இலங்கையில் டெல்டா கொவிட் திரிபின் உப பிறழ்வொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உப திரிபானது, B.1.617.2.104 எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

இலங்கையில் Delta டெல்டா கொவிட் திரிபின் மற்றுமொரு உப பிறழ்வு கண்டுபிடிப்பு-New Sub Variant of the Delta COVID Varient-Lineage-B.1.617.2.28-AY.104

குறித்த உப பிறழ்வு AY.104 என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் B.1.617.2.28 எனும் Delta திரிபு அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, அதற்கு AY.28 என பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது மற்றுமொரு உப பிறழ்வான  B.1.617.2.104 அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது Delta கொவிட்-19 வைரஸின் மூலத்திலிருந்து சற்று விலகி புதிய உப பிறழ்வாக மாற்றமடைந்துள்ளது.