இலங்கையில் பரவும் டெல்டா கொவிட் திரிபின் உப பிறழ்வு AY.28

இலங்கையில் பரவும் டெல்டா கொவிட் திரிபின் உப பிறழ்வு AY.28-The Delta COVID sub varientlineage-B.1.617.2.28-Prevalent in the Country is Named as AY.28

இலங்கையில் பரவி வரும் டெல்டா கொவிட் பிறழ்வின் உப பிறழ்வானது (B.1.617.2.28) AY.28 என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் அடங்கிய இணையத்தளத்தில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 95.8% ஆனோரின் தொற்றுக்கு டெல்டா திரிபே காரணமென அவர், ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.