சட்டவிரோதமாக மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் தீக்கிரை

சட்டவிரோதமாக தென் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொலிஸாரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிவுரைக்கமைவாகவே இச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக மன்னார் பாக்குநீரினையூடாக தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு ஆகிய கிராமங்களில் வந்து இறக்கியபோது மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 532 கிலோ கிராம் மஞ்சளே நேற்று (28.12.2020) மன்னார் பொலிஸ் உதவி அதியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில் தீக்கிரைக்கப்பட்டன.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.பி.ஜெயதிலக தலைமையில் பொலிஸ் தடவியல் நிபுணர்கள் இணைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்தே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் அமைச்சின் செயளாலரால் அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்களை உடனடியாக தீக்கிரையாக்கும் படியான அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்படி மஞ்சள் கட்டிகள் முதற்கட்டமாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

தலைமன்னார் விஷேட நிருபர்


Add new comment

Or log in with...