அவுஸ்திரேலியா, மாலைதீவு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கையர் நாடு திரும்பினர் | தினகரன்

அவுஸ்திரேலியா, மாலைதீவு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கையர் நாடு திரும்பினர்

அவுஸ்திரேலியா, மாலைதீவு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கையர் நாடு திரும்பினர்-More Than 500+ Sri Lankan Arrived From Australia-Africa-Maldives
ஆபிரிக்காவிலிருந்து வந்த பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

கொரோனா வைரஸ் பரவல் நிலைய காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கிய மாணவர்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்காகச் சென்ற சுமார் 500 இற்கும் அதிகமானோர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அந்த வகையில் இன்று (21) அதிகாலை தன்சானியாவின்,  தாருஸ் ஸலாம் நகரிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 1710 எனும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மடகஸ்கார், மொசாம்பிக், உகண்டா, கென்யா,ருவாண்டா ஆகிய ஆபிரிக்க நாடுகளில் சிக்கியிருந்த ஹோட்டல் துறைகளில் தொழில்புரியும் 289 இலங்கையர்களே இவ்வாறு நாடுதிரும்பியுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றையதினம் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான மற்றுமொரு விசேட விமானம்  மூலம் மாலைதீவிலிருந்து 255 பேரும், அவுஸ்திரேலியாவின் சிட்டினியிலிருந்து மற்றுமொரு விமானம் மூலம் 50 பேரும் என சுமார் 500 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.


Add new comment

Or log in with...