கொவிட்-19 நிதியத்திற்கு இன்று ரூ. 48 மில். அன்பளிப்பு; மொத்தம் ரூ. 70.3 கோடி

கொவிட்-19 நிதியத்திற்கு இன்று ரூ. 48 மில். அன்பளிப்பு; மொத்தம் ரூ. 70.3 கோடி-More donations to COVID 19 Healthcare Fund

நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் மார்ச் மாதம் 23ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

கங்காராம வெசக் நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவும் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சங்கம் அன்பளிப்பு செய்த 2.5 மில்லியன் ரூபாவை கலாநிதி சங்கைக்குரிய மல்வானே சந்திரரத்ன தேரர் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் 2.5 மில்லியன் ரூபாவும், எஸ்.டீ அமரசிங்க ஒரு மில்லியன் ரூபாவையும், ஹுவாவி டெக்னொலொஜீஸ் பிரைவட் லிமிடற் நிறுவனம்  1.5 மில்லியன் ரூபாவையும் இன்று நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர்.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

011-2354479/ 011-2354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.


Add new comment

Or log in with...