இலங்கையில் 3ஆவது கொரோனா மரணம் பதிவு; 73 வயது நபர்

இலங்கையில் 3ஆவது கொரோனா மரணம் பதிவு; 73 வயது நபர்-3rd COVID19 Death Reported-Total Deaths 03

இன்று அடையாளம் காணப்பட்ட மருதானையைச் சேர்ந்தவர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.

இன்று (01) பிற்பகல் 5.00 மணியளவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட மூவரில் ஒருவரான மருதானையைச் சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்

73 வயதான குறித்த நபர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (01) உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவரை IDH வைத்தியசாலைக்கு மாற்றிய வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் நீரிழிவு, அதிர இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக இயக்க பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கொண்டவர் எனவும், அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்றுமுன்தினமும் (30) நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்திருந்தார். இவர் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானது.

60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.

இரண்டாவது மரணம் நேற்றுமுன்தினம் (30) மொஹமட் ஜமால் எனும் நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.

இதேவேளை கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் மூவரும் என இலங்கையர் 06 பேர் கொரோனா தொற்றினால் இது வரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 146 ஆகும்.

இன்றையதினம் (01) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, 4 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 146 பேரில் தற்போது 122 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 03 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 146
குணமடைவு - 21

சிகிச்சையில் - 123
மரணம் - 03

மரணமடைந்தவர்கள் (06)
இலங்கையில் - 03
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 21
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 146
ஏப்ரல் 01 - 03 பேர் (146)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...