யாப்பு திருத்தமா, மாற்றமா? முடிவில்லை

நாட்டில் இன்று புதிய அரசியல் யாப்பு பற்றியே பேசப்பட்டுவருகின்றது. நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் திருத்தமா அல்லது புதிய அரசியல் யாப்பு உருவாக்கமா என்பதில் அரசும் தெளிவற்ற நிலையிவேயே காணப்படுகின்றது. பாராளுமன்றத்திலும் மாறுபட்ட கருத்தக்களே எதிரொலித்தக் கொண்டிரக்கின்றன. அதிலும் திருத்தம் மட்டுமே செய்யவேண்டும் என்ற பேரினனவாதக் கருத்துக்களே மேலோங்கி வருகின்றது.
 
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இதபற்றி இதவரை முடிவேதும் எடுக்கவில்லை என்றே தெரிவித்திருப்பதடன் மக்கள் கருத்துக்கமைய இது n தாடாபாக திர்மானம் எடுக்கப் போதகாக கூறியள்ளமையானத தமிழ் மக்களை; பொறுத்தவரையில் சந்தெகத்தையே தோற்றவித்துள்ளது.
 
மேற்கண்டவாறு பெரியகல்லாறு, உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்த கொண்டு பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
 
பாடசாலை அதிபர் எஸ்.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்.
நல்லாட்சியை உருவாக்குவதில் முழுப் பங்களிப்பை வழங்கிய எமது தமிழ் மக்கள் புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின அபிலாஷைகளை நிறைவேற்றி வைப்பாரென நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர்.
 
ஒட்டுமொத்த தமிழ் மக்களும்  தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குத் தொடர்ச்சியாக வாக்களித்து தமிழ் தேசியத்தின் அவசியத்தை வெளியிட்டள்ளதுடன் அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளனர். இதை ஒரு தடவை அல்ல பல தடைவ செய்து. தமிழ் தேசியத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே தரிழ் மக்களின் கருத்தானது மிகத் தெளிவாகவே பகிரங்கப்படுத்தபபட்டுள்ளது.
 
இந் நிலையில் மக்கள் கருத்தென்பது சிங்கள பெரும்பான்னையை மையப்படுத்தியே ஜனாதிபதி அவர்கள் வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வி இன்று தமிழ் மக்களிடம் தொக்கி நிற்கின்றது. மக்கள் கருத்தென்பது ஜனநாயக ரீதியில் தென் பகுதி மக்களின் பெரும்பான்மை கருத்தையே வெளிப்படுத்தவதாக அமையும்.
 
இன்று ஒரு சில சிங்களத் தலைவர்களைத் தவிர பல தலைவர்கள் தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படக் கூடாது என்பதில் சிங்கள மக்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ் விடயத்தில் சிங்கள மக்களின் கருத்து எதுவாக அமையும் என்பது அனைவரம் அறிந்த விடயமாக இருக்கின்றது.
 
அந்தக் கருத்திற்கே ஜனாதிபதி அவர்கள் முக்கியத்தவம் அளிக்கப் போகின்றாரா என்ற கேள்வி தமிழ் மக்களிடம் இயல்பாகவே எழுந்து கொண்டிருக்கின்றது. புதிய ஜனாதிபதியிடம் அடிமனதில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான ஏற்றுக் கொள்ளக் கூடி தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவராகவே காணப்படுகின்றார்.
 
அதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை சரிக்கடட வேண்டிய கட்டாயம் அவருக்கிரப்பதால் அவரும் இவ் விடயத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றாh என்பதையே அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
 
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் 13வது அரசியல் திருத்தத்தை செய்வதற்கு மக்கள் கருத்தறிய முற்பட்டிருந்தால் இன்று மாகாண சபையும் இருந்திரக்காது. சுவால்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் மேற்கொண்ட அந்த முயற்சிதான் அரைகுறை அதிகாரங்களுடன் என்றாலும் மாகாண சபைகள் இருந்து கொண்டிருக்கின்றன.
 
அதில் காணி, போலிஸ் அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தும் இந்த  நல்லாட்சியில் கூட அந்த அதிகாரங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை. இருப்பதையே கொடுப்பதற்கு அஞ்சும் இன்ரறைய நல்லாட்சியும் சிங்ளப் பேரினவாத்திற்கு  அடிபணிந்த செல்லும் வழக்கமான வரலாற்றுப் பின்னணியுடன்தான் சங்கமிக்கப்போகின்றதா என்பதே தமிழ் மக்களிடம் எழுந்தள்ள பெரிய கேள்வியாகும்.               
 
 
(கல்லாறு தினகரன் நிருபர் - வீ.கே. ரவீந்திரன்)

Add new comment

Or log in with...