ரத்துபஸ்வல மக்கள் பிரச்சினைக்கு தீர்வு

ரத்துபஸ்வல மக்களின் குடிநீர் உட்பட ஏனைய முக்கிய பிரச்சினைகள் எதிர்வரும் எப்ரல் மாதம் 05ஆம் திகதிக்கு முன்பதாக தீர்த்து வைக்கப்படும் என்ற இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்ரிபால் சிறிசேனவின் ஆலோசனையின் கீழ், இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
இதன்போது ரத்துபஸ்வல மக்களின் முக்கிய மூன்று கோரிக்கைகளான நட்டஈடு வழங்கப்படுதல், சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுத்தல், ஆர்ப்பாட்டக்கார்கள் மீது தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை தீர்த்து வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
 
1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ரத்துபஸ்வல மக்கள், ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே, ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து இடம்பெற்ற இவ்விசேட கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கம்பஹா மாவட்ட செயலாளர், வெலிவேரிய பிரதேச செயலாளர், குடிநீர் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர,
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சிரால் லக்திலக்க, மற்றும் ரத்துபஸ்வல மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Add new comment

Or log in with...