ஐ.தே.க.- ஜ.க பொன்சேகா இணையும் ஒப்பந்தம் இன்று

ஐக்கிய தேசிய முன்னணியுடன் முன்னாள் எம்.பி. சரத் பொன்சேக்காவின் ஜனநாயக்கக் கட்சி இணைந்து கொள்ளவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியும் சரத் பொன்சேக்கா அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சியும் இன்று ஸ்ரீகொத்தவில் வைத்து புரிந்துணர்வு

ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமென்றும் அவர் கூறினார்.

ஸ்ரீகொத்தவில் நேற்றுக் காலை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது சரத் பொன்சேக்காவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமாவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதியமைச்சர் பதிலளித்தபோது ஐ.தே.முவுடன் இணைவதும் எம்.பி. பதவி வழங்கப்படுவதும் இரு வேறு விடயங்களென சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், எம்.பி. பதவி வழங்குவது குறித்து கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் தீர்மானிப்பரென்றும் தெரிவித்தார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில், தேர்தலில் தோல்வியடைந்த ஒருவரை மீண்டும் அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லாதபோதும் நாட்டின் பாதுகாப்புக் குறித்து நன்கு அறிந்துவைத்துள்ள ஒருவரை அரசாங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருப்பின் அது பற்றி ஆராய்வதில் தவறு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

லக்ஷ்மி பரசுராமன் 

 


Add new comment

Or log in with...