இளைஞன் ஹிருனிகா எம்.பியிடமே அழைத்துச் செல்லப்பட்டார்

பொலிஸ் நீதிமன்றில் தெரிவிப்பு

செய்தியாளர் மாநாட்டு வீடியோ ஆவணத்தை சமர்ப்பிக்கவும் உத்தரவு

தெமட்டகொட பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நபர், கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடமே அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

 ஐந்தாவது சந்தேக நபரின் மகளின் வாக்குமூலத்திற்கமைய இது நிரூபணமாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி ஹிருணிகா மெடத்தை சந்திப்பதற்குச் சென்ற தந்தை, அவரை சந்தித்த பின்னர் அங்கிருந்த வேறு சிலருடன் கருப்பு நிற ஜீப் வண்டியில் தெமட்டகொட துணிக்கடையில் இருந்த நபரை கடத்தி ஹிருணிகா மெடத்திடம் அழைத்துச் சென்றுள்ளதாக சந்தேக நபரின் மகள் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவுக்குச் சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன் போது மேற்படி சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த சி.ஜ.டியினர் தாம் கடந்த 30 ஆம் திகதி 5 ஆவது சந்தேக நபரின் மகளிடம் வாக்குமூலம் பதிந்ததாக அறிவித்தனர்.

தனது தாய் வேறு நபரொருவருடன் கடந்த 20 ஆம் திகதி சென்றதாகவும் அந்த நபர் லுனாவ தேவாலயத்திற்கு அருகிலுள்ள துணிக்கடையில் தொழில் புரிவதாகவும் தெரிவித்துள்ள குறித்த சாட்சி, அவரை தன்னால் அடையாளங்காட்ட முடியும் என தான் தந்தையிடம் தெரிவித்ததாகவும் பொலிஸில் கூறியுள்ளார்.

மறுநாள் தனது தந்தையுடன் வெல்லம்பிட்டி பொலிஸிற்கு சென்றதாகவும் அதன் பின்னர் அவர் ஹிருணிகா மெடத்தை சந்திக்க சென்றதாகவும் சந்தேக நபரின் மகள் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சிவப்பு டீ -சேர்ட் அணிந்த நபர் தாயாருடன் தொடர்பு வைத்திருந்தாக அடையாளங்காட்டியுள்ள இவர். கடத்தப்பட்ட அவர் ஹிருணிகா மெடத்திடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைப் படி 5 ஆவது சந்தேக நபரிடம் மீண்டும் வாக்கு மூலம் பெற்றதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த சி.ஜ.டி யினர் குறித்த சந்தேக நபர் ரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாவும் குறிப்பிட்டனர்.

அதனால் அவரை ஏனைய சந்தேக நபர்களில் இருந்து வேறாக வைக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் நீதிமன்றத்தை கோரினர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர நடத்திய ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான இரு வெட்டுக்களை விசாரணைக்காக பெறுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இதன் படி 5 ஆவது சந்தேக நபரை தனியாக வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் தெமட்டகொடவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக ஐ.தே.மு பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு குறித்த வீடியோ பதிவுகளை வழங்குமாறு பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்

குறித்த நிகழ்வு பற்றிய வீடியோ பதவிவுகளை கொழும்பு குற்றப் பிரிவிடம் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது, குறித்த விடயம் பற்றிய முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள சம்பவத்துடன் தொடர்புபட்ட முழுமையான நிகழ்வுகளின் வீடியோ பதிவுகள் அவசியம் எனச் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கமையவே நீதிமன்றம் மேற்கண்ட பணிப்புரையை விடுத்துள்ளது.

இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருனிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை கொழும்பு குற்றப் பிரிவினர் ஏற்கனவே நாடியிருந்தனர்.

கடந்த டிசம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், தெமட்டகொட கடத்தல் சம்பவத்துடன் தான் தொடர்புபடவில்லையென்றும், தனக்கு தெரியாமலே கடத்தல் இடம்பெற்றதாகவும் கூறியிருந்தார்.

ஹிருனிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஐவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   


Add new comment

Or log in with...